இதுபோல் நிறைய படங்கள் நீங்கள் நடிக்க வேண்டும்…அஜித்துக்கு ரஜினிகாந்த் வாழ்த்து .

அஜித் நடித்து வெளிவந்த “நேர்கொண்ட பார்வை ” திரைப்படம் திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.பாலியல் பிடியில் சிக்கி தப்பிக்க வழியில்லாமல் தவிக்கும் 3 பெண்களை பற்றிய கதை இது. அந்த பெண்களுக்கு ஆதரவாக வாதாடி வெற்றிகரமாக இந்த வழக்கை முடித்து, குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கி கொடுக்கும் வக்கீலாக அஜித் நடித்துள்ளார்.

Loading...

அஜித்தின் திரையுலக வரலாற்றில் இந்தப்படம் முக்கியமான படமாக இருக்கும் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.மேலும் இந்தப்படம் திரைக்கு வந்த 7 நாட்களில் 50 கோடி ருபாய் வசூல் செய்து சாதனை செய்துள்ளது.வெளிநாடுகளிலும் அதிக வசூலை பெற்றுள்ளது.

இந்நிலையில் ரஜினிகாந்த் தனது வீட்டில் அமைக்கப்பட்டுள்ள தியேட்டரில் நேர்கொண்ட பார்வை படத்தை பார்த்துவிட்டு அஜித்தை தொலைபேசியில் தொடர்புகொண்டு பாராட்டியுள்ளார். உங்களை இதுபோன்ற கதைகளில் பார்ப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. உங்கள் திரையுலக வாழ்க்கையில் இந்தப்படம் ஒரு மைல்கல்லாக இருக்கும், நீங்கள் இதுபோன்ற படங்களில் அதிகமாக நடிக்க வேண்டும் என்றும் ரஜினிகாந்த் வாழ்த்தியுள்ளார்

Loading...
Loading...

செய்திகளை உடனே பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து telegram சேனலில் இணைத்து கொள்ளவும்

t.me/tnnews24official
About Tnnews24 2672 Articles
Arun Ramesh, Freelance Journalist, covers Defence & Geo-politics.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*