Connect with us

#24 Exclusive

ரஜினியை யார் நீ என கேட்ட இளைஞன் ஒரு திருடன் கையும் களவுமாக பிடித்து கைது செய்தது போலீஸ் பலே ஸ்கெட்ச் போட்டு செயல்பட்டது அம்பலம் !!

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூட சொல்லி நடந்த போராட்டத்தில் துப்பாக்கி சூடு நடைபெற்றதில் காயமடைந்தவர்களை சந்தித்து ஆறுதல் சொல்ல நடிகர் ரஜினி சென்றார் அப்போது ஒருவர் யார் நீங்க?” என்று ரஜினியை பார்த்து கேட்கிறார். அதற்கு ரஜினியோ நான் ரஜினிகாந்த்" என்று சொல்கிறார்.ரஜினிகாந்த் என்பது தெரிகிறது, எங்கேயிருந்து வருகிறீர்கள்?” என அந்த இளைஞர் மீண்டும் கேட்கிறார். அதற்கு நடிகர் ரஜினிகாந்த், நான் சென்னையிலிருந்து வருகிறேன்" என்று சொன்னதும்,சென்னையிலிருந்து வருவதற்கு நூறு நாள் ஆகுமா?” என அந்த இளைஞர் கேட்க, ரஜினி மிகவும் சிரித்தபடியே அந்த இடத்தை விட்டு நகர்ந்து சென்றார் .அந்த இளைஞர் குறித்து விசாரித்ததில், அவருடைய பெயர் சந்தோஷ் என்பதும், `அனைத்துக் கல்லூரி மாணவர்கள் கூட்டமைப்பின் தூத்துக்குடி ஒருங்கிணைப்பாளர்’ என்பதும் தெரியவந்தது.

அதனையடுத்து பலரும் கிண்டல் அடித்து அந்த இளைஞன் வீடியோவை வைத்து ட்விட்டரில் ட்ரெண்ட் செய்தனர், இந்நிலையில் அந்த இளைஞன் திருட்டு வழக்கில் கைதாகியிருப்பது அதிர்ச்சியை போராளிகளுக்கு ஏற்படுத்தியுள்ளது.

துாத்துக்குடி, முத்துகிருஷ்ணாபுரத்தை சேர்ந்த சாம்குமார் வயது 24. இவரது வீட்டு முன்பு நிறுத்தியிருந்த பைக் காணாமல் போனது இதனையடுத்து வடபாகம் போலீசார் விசாரணையில், துாத்துக்குடி, பண்டாரம் பட்டியை சேர்ந்த சந்தோஷ் 23, மற்றும் கால்டுவெல் காலனி மணி23, ஆசிரியர் காலனி சரவணன் 22, ஆகியோர் பைக்கை திருடியது தெரிந்தது.

Loading...

இவர்கள் தொடர்ந்து பல இடங்களில் பைக்கை திருடி அதில் விற்று கிடைக்கும் பணத்தில் தமிழன் கோஷம் போட்டு போராளிகளாக சுற்றி வந்ததும் அம்பலமாகியிருக்கிறது, இதில் சந்தோஷ் என்பவர் தான் ரஜினியை யார் என்று மருத்துவமனையில் கேட்ட இளைஞன், இப்போது காலம் சந்தோஷ் ஒரு திருடன் என அடையாள படுத்தி இருக்கிறது, மேலும் அந்த இளைஞன் நாம் தமிழர் கட்சியில் இருப்பதாக உறுதி படுத்தாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

Loading...

மேலும் சந்தோஷ் பல்வேறு திருட்டு வழக்கில் ஸ்கெட்ச் போட்டு மூளையாக செயல்பட்டதும், இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்திவருவதாகவும், விரைவில் முழு தகவல் வெளியாகும் எனவும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன

©TNNEWS24

Loading...
Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending