Connect with us

சினிமா

மார்ச் 5-ல் ரஜினியின் அடுத்த படத்தின் பூஜை ? தயாரிப்பாளர் யார் தெரியுமா?

மார்ச் 5-ல் ரஜினியின் அடுத்த படத்தின் பூஜை ? தயாரிப்பாளர் யார் தெரியுமா?

ரஜினி தற்போது அண்ணாத்த படத்தில் நடித்து வரும் நிலையில் அவர் நடிக்கும் அடுத்த படத்தின் பூஜை மார்ச் 5 ஆம் தேதி நடக்க இருப்பதாக சொல்லப்படுகிறது.

ரஜினியின் தர்பார் படம் எதிர்மறை விமர்சனங்களை சந்தித்து வரும் நிலையில் அவர் இப்போது சிறுத்தை சிவா இயக்கும் அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் குஷ்பூ மீனா கீர்த்தி சுரேஷ் மற்றும் நயன்தாரா ஆகிய கதாநாயகிகள் நடித்து வருகின்றனர். மேலும் முதல் முறையாக ரஜினியுடன் பிரகாஷ்ராஜ் இணைந்து நடித்து வருகிறார்.

Loading...

சமீபத்தில் இப்படத்தின் தலைப்பு மற்றும் மோஷன் போஸ்டர் வெளியாகியது. இந்நிலையில் ரஜினி நடிக்கும் அடுத்த படத்தின் பூஜை வரும் மார்ச் 5 ஆம் தேதி நடக்க இருப்பதாக சொல்லப்படுகிறது. மேலும் இந்த படத்தை தயாரிப்பது ரஜினியின் சக போட்டியாளரும் நீண்ட நாள் நண்பருமான கமல்தான் என சொல்லப்படுகிறது.

Loading...

கைதி படத்தின் வெற்றிக்குப் பின்னர் லோகேஷ் கனகராஜுடன் பணிபுரிய உள்ளோம் என கமல் சொன்னது குறிப்பிடத்தக்கது. அதே போல ரஜினி நடிப்பில் லோகேஷ் கனகராஜ் ஒரு படம் இயக்க இருப்பதாக செய்திகள் வெளியாகின. எனவே ரஜினி நடிப்பில் லோகேஷ் இயக்கும் படத்தினைக் கமல் தயாரிக்க இருப்பது கிட்டதட்ட உறுதியாகியுள்ளது. ஆனால் இந்த பூஜை தகவல் தொடர்பாக இன்னும் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகவில்லை.

Loading...

Trending