Connect with us

சர்ச்சைகள்

என் வீடியோவை டிவிட்டர் நீக்கியது ஏன் – ரஜினி விளக்கம் !

என் வீடியோவை டிவிட்டர் நீக்கியது ஏன் – ரஜினி விளக்கம் !


கொரோனா விழிப்புணர்வுக்காக ரஜினி வெளியிட்ட வீடியோவை டிவிட்டர் விதிமுறைகளை மீறியதாக நீக்கிய நிலையில் அது குறித்து ரஜினி விளக்கம் அளித்துள்ளார்.

கொரோனா குறித்த விழிப்புணர்வு வீடியோ ஒன்றிணை வெளியிட்டிருந்தார் ரஜினிகாந்த அந்த வீடியோவில் கொரோனா வைரஸ் 14 மணி நேரத்தில் கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கலாம். அதற்காகதான் காலை 7 மணியில் இருந்து இரவு 9 மணி வரை மோடி ஊரடங்கை அறிவித்துள்ளார் எனக் கூறியிருந்தார்.

Loading...

ஆனால் ரஜினியின் இந்த 14 மணி நேரக் கணக்கு உண்மைக்குப் புறம்பானது எனக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. மருத்துவரும் திமுக எம் பி யுமான செந்தில்குமார் ‘வெறும் 14 மணிநேரம் மக்கள் ஊரடங்கு உத்தரவின் மூலம் வைரஸ் பரவுவதை தடுக்க முடியாது. தயவுசெய்து நடைமுறையைப் புரிந்துகொள்ளுங்கள்.’ எனக் கூறியிருந்தார். இதுபோல பலரும் தங்கள் கருத்துகளை டிவிட்டரில் வெளியிட்டு இருந்தார்கள்.

Loading...

இந்நிலையில் ரஜினியின் வீடியோ டிவிட்டர் விதிமுறைகளை மீறியுள்ளது எனக் கூறி அந்த வீடியோ நீக்கப்பட்டது. இது குறித்து ரஜினி ஆதரவாளர்கள் தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்ய டிவிட்டர் இந்தியா ‘கொரோனா வைரஸ் எத்தனை மணி நேரத்தில் செயல் இழக்கும் என்பது குறித்து இதுவரை உறுதியாகக் கண்டறியப்படவில்லை. மனிதர்கள் மற்றும் சுற்றுப்புற வெப்பத்தின் அடிப்படையில் சில மணி நேரங்கள் தொடங்கி சில நாட்கள் வரையிலும் கொரோனா செயலாற்றும் என்றும் உலக சுகாதார அமைப்பு அறிவித்திருந்தது.’ எனத் தெரிவித்து ரஜினியின் வீடியோ நீக்கப்பட்டதற்கானக் காரணம் குறித்து விளக்கம் அளித்துள்ளது. இது சம்மந்தமாக இப்போது ரஜினி விளக்கம் அளித்துள்ளார்.

தனது டிவிட்டர் பக்கத்தில் ‘நேற்று பதிவு செய்த காணொளியில் 12 முதல் 14 மணி நேரம் மக்கள் வெளியில் நடமாடமல் இருந்தாலே கொரோனா வைரஸ் பரவுவது தடைபட்டு, சூழல் மூன்றாம் நிலைக்கு செல்வதை தவிர்க்கலாம் என்று நான் கூறியிருந்தால், அது இன்று மட்டும் அப்படி இருந்தாலே போதும் என்று தவறாக புரிந்து கொள்ளப்பட்டு அதிகம் பகிரப்பட்டது. இதனால் டுவிட்டர் நிர்வாகம் அதை நீக்கி உள்ளது.

நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர அரசு பரிந்துரைக்கும் காலம் வரை இன்று போலவே சுய தனிமைப்படுத்துதலை நாம் கவனமாக பின்பற்றி இந்த கொடிய வைரஸை வீழ்த்துவதற்கான முயற்சியில் கவனத்தைச் செலுத்துவோம் இவ்வேளையில் என்னுடைய காணொளியின் நோக்கத்தை புரிந்துகொண்டு, ஆதரித்து மக்களிடம் பதிவை சரியான முறையில் கொண்டு சேர்த்த அனைவருக்கும் நன்றி.’ எனத் தெரிவித்துள்ளார்.

Loading...
Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending