Connect with us

சினிமா

ரஜினியின் இன் டு த வைல்டு – தொலைக்காட்சி ஒளிபரப்புத் தேதி அறிவிப்பு !

ரஜினியின் இன் டு த வைல்டு – தொலைக்காட்சி ஒளிபரப்புத் தேதி அறிவிப்பு !

ரஜினி பங்கேற்றுள்ள தொலைக்காட்சி நிகழ்ச்சியான இன் டு த வைல்ட் நிகழ்ச்சி மார்ச் 23 ஆம் தேதி ஒளிபரப்பாகவுள்ளது.

’இன் டு த வைல்ட்’ நிகழ்ச்சி உலக அளவில் ரசிகர்களால் விரும்பிப் பார்க்கப்படும் நிகழ்ச்சிகளில் ஒன்று. அந்த நிகழ்ச்சியை நடத்தி வரும் பியர் கிரில்ஸ் அடர்ந்த காடுகள் மற்றும் பாலைவணம் ஆகிய அசாதாரணமான பகுதிகளுக்கு சென்று அங்கிருந்து தப்பிக்கும் சாகசப் பயணங்களை செய்பவர்.

Loading...

இந்த பயணத்தில் அவர் காட்டில் கிடைக்கும் விலங்களையோ பறவைகளையோ வேட்டையாடி சாப்பிடுவார். இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் அவ்வபோது பிரபலங்கள் கலந்து கொள்வது வழக்கம். அமெரிக்க அதிபர் ஒபாமா, இந்திய பிரதமர் மோடி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Loading...

இதையடுத்து தென் இந்தியாவின் சூப்பர் ஸ்டார் ரஜினி கடந்த மாதம் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதாக செய்திகள் வெளியாகின. அது சம்மந்தமான புகைப்படமும் இணையதளத்தில் வெளியானது. இந்நிலையில் இப்போது அந்த நிகழ்ச்சி தொகுப்பாளர் பியர் கிரில்ஸ் தனது சமூக வலைதள பக்கத்தில் ரஜினியுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இந்நிலையில் இந்நிகழ்ச்சி வரும் மார்ச் மாதம் 23 ஆம் தேதி இரவு 8 மணிக்கு டிஸ்கவரி சேனலில் ஒளிபரப்பாகும் என அறிவித்துள்ளது டிஸ்கவரி சேனல். இதை பியர் கிரில்ஸ் தனது சமூக வலைதள பக்கத்தில் நிகழ்ச்சியின் முன்னோட்டத்தோடு பகிர்ந்துள்ளார். இந்த செய்தியால் ரஜினி ரசிகர்கள் உற்சாகமாகியுள்ளனர்.

Loading...

Trending