டெல்லி கலவரத்திற்கு காரணம் யார்? ரஜினியின் சகோதரர் பரபரப்பு பேட்டி

டெல்லி கலவரத்திற்கு காரணம் யார்? ரஜினியின் சகோதரர் பரபரப்பு பேட்டி

டெல்லியில் நடைபெற்று வரும் கலவரத்திற்கு காரணம் எதிர்க்கட்சிகளும் ஒருசிலரின் சதியும்தான் என்றும் அமெரிக்க அதிபர் வருகையின்போது திட்டமிட்டு இந்த கலவரத்தை அவர்கள் செய்திருப்பதாகவும் ரஜினியின் சகோதரர் சத்தியநாராயணா என்று பேட்டி அளித்து உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பர்கூர் என்ற பகுதியில் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகி ஒருவரின் இல்லத் திருமணத்தில் கலந்து கொள்வதற்காக ரஜினியின் சகோதரர் சத்தியநாராயணா இன்று வருகை தந்திருந்தார் அதன் பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்த போது ’அமெரிக்க அதிபர் வருகையின் போது இந்தியாவுக்கு கெட்ட பெயரை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் ஒரு சிலர் வேண்டுமென்றே கலவரத்தை ஏற்படுத்தி விட்டதாகவும் இதற்கு எதிர்க்கட்சிகளும் உடந்தை என்றும் கூறினார்.

மேலும் குடியுரிமை சட்டத்துக்கு தான் முழுமையாக ஆதரிப்பதாகவும், இந்த சட்டத்தை பிரதமர் மோடி சிறப்பாக செயல்படுத்தி வருவதாகவும் அவர் தெரிவித்தார். அரசியல் கட்சி குறித்த அறிவிப்பை வரும் தமிழ் புத்தாண்டு தினத்தில் ரஜினிகாந்த் அதிகாரபூர்வமாக தெரிவிப்பார் என்று கேள்வி ஒன்றுக்கு சத்தியநாராயணன் பதிலளித்தார்.

Loading...
Loading...

TNNEWS24 TEAM

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *