மீண்டும் இந்துக்களுக்குகாக களமிறங்கினார் ராஜேந்திர பாலாஜி ! ஒரு அமைச்சர் இவ்வாறு செய்வது இதுவே முதல்முறை !!

மீண்டும் இந்துக்களுக்குகாக களமிறங்கினார் ராஜேந்திர பாலாஜி ! ஒரு அமைச்சர் இவ்வாறு செய்வது இதுவே முதல்முறை !!

Loading...

கொரோனா எனும் கொடிய தொற்றின் எதிரொலியாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் 21 நாள் ஊரடங்கு முறை நடைமுறைப்படுத்தபட்டுள்ளது, இதனால் பல்வேறு தரப்பினரும் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர், மேலும் வீடுகளில் மக்கள் முடங்கியுள்ளதால் பலர் அன்றாட உணவிற்கு அடுத்தவர்களை எதிர்பார்க்கும் நிலை உண்டாகியுள்ளது.

மாநில அரசுகள் சார்பில் பல்வேறு நிதி உதவிகள் அடி மட்டத்தை சேர்ந்த மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது, இந்நிலையில் கோவிலின் தினசரி வருமானத்தை எதிர்பார்த்து வாழ்க்கை நடத்தி வந்த அர்ச்சகர்கள் தொழில் பாதிப்படைந்துள்ளது, இதனால் அவர்கள் தினசரி வருமானம் இல்லாமல் குடும்பம் நடத்துவதற்கு சிரமத்தை அடைந்துள்ளனர்.

Loading...

அவர்களின் துயரம் குறித்து பால்வளத்துறை ராஜேந்திர பாலாஜிக்கு கொண்டு செல்லப்பட்டது, இதனையடுத்து விருதுநகர் மாவட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் பணியாற்றும் அர்ச்சகர்கள், பணியாளர்கள் (அனைத்து சாதிகள் உட்பட ) விவரங்களை கண்டறிந்து அதில் ஏழ்மையில் உள்ளோர் விவரங்களை பெற்றார்.

விருதுநகர் , சிவகாசி இந்து சமய அறநிலையத்துறை கோயில்களில் பணியாற்றும் அர்ச்சகர்களுக்கு ரூபாய் 10000 வீதமும் கோயில் பணியாளர்களுக்கு ரூபாய் 5000 வீதமும் மொத்தம் 50 நபர்களுக்கு ரூபாய் 2லட்சத்து80ஆயிரம் நிதி உதவியை தனது சொந்த செலவில் வழங்கினார் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி.

தமிழகத்தை சேர்ந்த அமைச்சர் ஒருவர் ஏழ்மையில் இருக்கும் கோவில் அர்ஜகர்கள் பணியாளர்கள் ஆகியோருக்கு உதவுவது இதுவே முதல்முறை, இந்துக்களுக்கு ஆதரவாக செயல்படுகிறார் என்ற காரணத்திற்காக ராஜேந்திர பாலாஜியின் மாவட்ட செயலாளர் பதவியை எடப்பாடி பறித்ததாக செய்திகள் வெளியான நிலையியிலும் அவர் தொடர்ந்து தனது சேவையை இந்து மதத்தை சேர்ந்தோருக்கு அளித்து வருகிறார்.

என்றும் தான் கொண்ட கொள்கையில் உறுதுணையாக இருக்கும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு இந்துக்கள் உறுதுணையாக இருப்போம் என சமூகவலைத்தளங்களில் கருத்துக்கள் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

©TNNEWS24

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*