இந்துக்களுக்கு ஆதரவாக பேசியது தவறா? இப்படி ஒரு தண்டனையா என்ன நடக்கிறது தமிழகத்தில் !!

இந்துக்களுக்கு ஆதரவாகவும் வெளிப்படையாக உண்மையை உடைத்து பேசியதற்காகவும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை பதவி நீக்கம் செய்யவேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் கூறியிருப்பது இப்படி தண்டனையா என தமிழகத்தில் உள்ள இந்துக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது, ஸ்டாலின் கருத்து கூறியதோடு மட்டுமல்லாமல் ஆளுநரிடம் இதுகுறித்து திமுக சார்பில் முறையிட போவதாகவும் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க போவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Loading...

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாயம் கேட்பது தவறு என்றால், திருமணம் விழாவில் இந்து திருமணம் குறித்து அவதூறாக விமர்சனம் செய்த ஸ்டாலினும் எதிர்க்கட்சி தலைவர் பதவியில் இருந்து விலகவேண்டும் என இந்து அமைப்பினர் பதிலடி கொடுத்து வருகின்றனர், மேலும் திமுக ஆட்சியில் இருந்த காலத்தில் முதல்வராக இருந்த கருணாநிதியில் தொடங்கி மற்ற அமைச்சர்கள்வரை இந்து கடவுள்களை இழிவு செய்து பேசியுள்ளனர்.

ஆனால் ராஜேந்திர பாலாஜி இதுநாள்வரை எந்த மதம் நம்பிக்கையும், எந்த மதத்தினரையும் இழிவு படுத்தியது இல்லை அவரது மாவட்டம் விருதுநகரில் சொந்த தமிழகத்தை சேர்ந்த சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட நிலையில் அதனை திமுகவினர் தட்டி கேட்காமல் பாதிக்கப்பட்ட மாணவி இந்து என்பதாலும் பலாத்காரம் செய்து கொன்றவன் முஸ்லீம் என்பதாலும் திமுக வாய் திறக்காமல் இருப்பதாக குற்றம் சுமத்தினார்.

Loading...

ஆனால் இதற்கெல்லாம் பதில் சொல்லாத ஸ்டாலின் இந்துக்களுக்கு ஆதரவாக ஒரு அமைச்சர் பேசியதற்காக அவரை பதவி நீக்கம் செய்யவேண்டும் என பேசியிருப்பது இந்துக்கள் இடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது, இந்நிலையில் ராஜேந்திர பாலாஜிக்கு ஆதரவாக அவரது ஆதரவாளர்கள் கட்சி கடந்து குரல் கொடுத்து வருகின்றனர், குறிப்பிட்ட மதத்தினர் மதவறு செய்தால் தட்டி கேட்காத ஸ்டாலின் இந்துக்களுக்கு ஆதரவாக நிற்கும் ராஜேந்திரபாலாஜியை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தியிருப்பது.,

இந்து மதத்திற்கு எதிராக ஸ்டாலினின் நிலைப்பாட்டினை காட்டுவதாக சமூக வலைத்தளங்களில் விமர்சனம் எழுந்து வருகின்றன. இந்நிலையில் ராஜேந்திர பாலாஜி பதவி நீக்கம் செய்யப்படுவதற்கு எந்த வாய்ப்பும் இல்லை என்றும் அவர் சரியான கருத்தினைத்தான் கூறியுள்ளார் என அதிமுக மேலிடம் மட்டங்கள் கூறுகின்றனர்.

திமுக தலைவர் ஸ்டாலினுக்கு அவரது facebook பக்கத்திலேயே எதிர்ப்பு கிளம்பியிருப்பது குறிப்பிடத்தக்கது.

©TNNEWS24

Loading...
About Tnnews24 2663 Articles
Arun Ramesh, Freelance Journalist, covers Defence & Geo-politics.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*