சற்றுமுன் யாரும் எதிர்பாராத வகையில் ராஜஸ்தான் மாநிலத்தில் அரங்கேறியது அதிரடி அரசியல் ட்விஸ்ட் !!!

ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் ஹெலாட் நேற்று ஊடகங்களில் வெளிப்படையாக தனது ஆட்சியை கவிழ்க்க சிலர் சதி செய்வதாகவும், இது வாஜ்பாய் காலத்து பிஜேபி அல்ல என்றும் மிகவும் மோசமாக ஆட்சியை கைப்பற்றும் நோக்கில் செயல்படுவதாக கூறியிருந்தார்.

Loading...

இதனையடுத்து மத்திய பிரதேச அரசியலை போன்று ராஜஸ்தான் மாநில அரசியலும் மாறப்போவதாகவும், ஜோதிராதித்ய சிந்தியா போன்று இப்போது ராஜஸ்தான் மாநிலத்தில் சச்சின் பைலட் ஆட்சி கவிழ்ப்பிற்கு காரணமாக போகிறார் என்ற செய்திகள் வலம்வந்தன.

சச்சின் பைலட் டெல்லியில் இருப்பதாக கூறிய நிலையில் அவருடன் 25MLA களும் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது என்றும், சோனியா காந்தியை சந்தித்து தனக்கு ராஜஸ்தான் மாநில முதல்வர் பதவியை சச்சின் கேட்க இருப்பதாகவும் அவர் அதனை நிச்சயம் ஏற்று கொள்ளமாட்டார் என்பதால் பாஜகவில் இணைய முடிவை அறிவிக்கலாம் என செய்திகள் வெளியாகின

Loading...

சச்சின் பைலட் டெல்லியில் இருப்பதையும் அவருடன் MLA கள் தொடர்பில் இருப்பதையும் ANI செய்தி நிறுவனம் உறுதி படுத்தி இருந்தது, 72 MLA களை கொண்ட பாஜக எப்படி ஆட்சி அமைக்க முடியும் என்பதுதான் சிலரின் கேள்வியாக இருந்த நிலையில் ட்விஸ்ட் வெளியாகியுள்ளது, ஏனென்றால் மொத்தமுள்ள 200 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சிக்கு 106 பேர் இருக்கின்றனர். இதில் கடந்த ஆண்டு பகுஜன் சமாஜ் கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட 6 பேரும் அடங்குவர்.

மேலும் 13 சுயேட்சை எம்.எல்.ஏக்களில் 12 பேரின் ஆதரவு காங்கிரஸிற்கு இருந்தது. இதில் 3 பேர் இன்று காலை தங்கள் ஆதரவை வாபஸ் பெற்றுக் கொண்டனர். இதைத்தவிர 2 பழங்குடியின எம்.எல்.ஏக்கள், 1 ராஷ்டிரிய ஜனதா தள் எம்.எல்.ஏ, 2 சிபிஎம் எம்.எல்.ஏக்கள் வெளியிலிருந்து ஆதரவு அளித்து வருகின்றனர். மறுபுறம் பாஜகவிற்கு 72 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். இவர்களுக்கு ராஷ்டிரிய லோக்தந்திரிக் கட்சியின் 3 எம்.எல்.ஏக்கள் ஆதரவளித்து வருகின்றனர்.

சச்சின் பைலட்டின் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 22 பேர் மற்றும் மூன்று சுயேட்சை எம்.எல்.ஏக்கள் டெல்லியின் பல்வேறு ஓட்டல்களில் தங்கியிருப்பதாக கூறப்படுகிறது. ஆளும் காங்கிரஸ் அரசிற்கு மேற்குறிப்பிட்ட 25 எம்.எல்.ஏக்களும் தங்கள் ஆதரவை வாபஸ் பெற்றுவிட்டால் ஆட்சி செய்ய தேவையான பெரும்பான்மை 88ஆக குறையும். ஆனால் அப்போதும் பாஜகவிற்கு 72 எம்.எல்.ஏக்கள் மட்டுமே இருப்பர். இதனால் ஆட்சி அமைக்க வாய்ப்பே இல்லை.

என காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவான நபர்கள் காலையில் இருந்து தெரிவித்தனர் ஆனால் இப்போது சிந்தியா பக்கம் 40 MLA கள் இருப்பதாக யாரும் எதிர்பாராத அதிரடி ட்விஸ்ட் அரங்கேறி இருக்கிறது, கட்சியில் மூன்றில் ஒரு பங்கு உறுப்பினர்கள் கட்சியில் இருந்து வெளியேறினால் அவர்கள் தகுதியிழப்பு நடவடிக்கைக்கு உள்ளாக மாட்டார்கள் என்றும் விதி இருப்பதால்.

நிச்சயம் ராஜஸ்தான் அரசியல் 3 நாட்களுக்குள் முடிவிற்கு வரும் என்கிறார்கள், அடுத்தது மகாராஷ்டிரா பக்கம் திரும்புவார்களே என சிவசேனா கட்சி தூக்கம் இன்றி MLA களுடன் தொடர்பில் இருக்கிறதாம்.

©TNNEWS24

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://telegram.me/tnnews24official

Loading...

செய்திகளை உடனே பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து telegram சேனலில் இணைத்து கொள்ளவும்

t.me/tnnews24official
About Tnnews24 3948 Articles
Arun Ramesh, Freelance Journalist, covers Defence & Geo-politics.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*