இது லிஸ்டிலேயே இல்லையே ராஜஸ்தானில் மீண்டும் காவி கொடி ! இரவோடு இரவாக உண்டான அதிரடி மாற்றம் !!!

மாநிலங்களவை தேர்தலை தொடர்ந்து தற்போது ராஜஸ்தானில் மீண்டும் பாஜக ஆட்சி அமைவதற்கான சாத்தியக்கூறுகள் அந்த மாவட்டத்தில் அதிக அளவு தென்பட தொண்டாகியுள்ளன, காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் ஒன்றான ராஜஸ்தான் மாநிலத்தில் முதல்வராக அசோக் ஹெலோட் பதவி வகித்து வருகிறார்.

Loading...

அசோக் ஹெலோட்டிற்கும், மற்றொரு காங்கிரஸ் இளம்தலைவர் சச்சின் பைலட் இருவருக்கும் இடையே பல நாட்களாக மனக்கசப்பு இருந்துவருகிறது, ராஜஸ்தான் மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் வெற்றிபெற்றால், சச்சின் பைலட் மற்றும் ஜோதிராதித்ய சிந்தியா ஆகியோரை முதல்வராக ஆக்குவதாக ராகுல் வாக்குறுதி கொடுத்திருந்தார்.

ஆனால் தேர்தலுக்கு பிறகு இருவரையும் கழட்டிவிட்டனர், இந்த சூழலில் மத்திய பிரதேசத்தில் சிந்தியா தனது ஆதரவு MLA களை காங்கிரஸ் கட்சியில் இருந்து ராஜினாமா செய்யவைத்து பின்பு பாஜகவில் இணைந்தார், இதனால் அங்கு காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்து பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது.

Loading...

தற்போது அதே பாணியில் சச்சின் பைலட் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைய இருப்பதாக கூறப்படுகிறது, அவரது தலைமையில் 40 MLA கள் வரை ராஜினாமா செய்யலாம் என கூறப்படுவதால் காங்கிரஸ் தலைமை கழகத்தில் உள்ளது.

மேலும் நேற்று ராஜஸ்தானில் அரங்கேறிய சம்பவம் இதனை உறுதிப்படுத்தியுள்ளது, மாநிலங்களவை தேர்தலுக்கு முன்பு காங்கிரஸ் MLA கள் அடைத்துவைக்கபட்ட பங்களாவில் மீண்டும் காங்கிரஸ் MLA களை அடைக்க அசோக் ஹெலாட் திட்டமிட்டு, ரெசார்ட்டில் வேலைகள் நடைபெற்று வருவதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அத்துடன் சச்சின் பைலட்டையும் தொடர்பு கொள்ளமுடியவில்லை எனவும் செய்திகள் வெளியாகி இருக்கின்றன, இதனை மேலும் உறுதிப்படுத்தும் விதமாக அசோக் ஹெலாட் நேற்று செய்தியாளர்களை அழைத்து பாஜக அரசு முந்தைய வாஜ்பாய் அரசு போல இல்லை எங்கள் ஆட்சியை கவிழ்க்க பேரம் பேசி வருகிறார்கள் என்ன நடக்கும் என தெரியவில்லை இதுதான் ஜனநாயகமா என கேள்வி எழுப்பினார்.

இந்நிலையில் பாஜகவின் காவி கொடி மீண்டும் ராஜஸ்தானில் பறப்பது ஏறத்தாழ முடிவாகிவிட்டது என்றும் நாள் குறிப்பது மட்டுமே பாக்கி எனவும் ராஜஸ்தான் பாஜகவினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர், அடுத்து மஹாராஷ்டிரா எப்போது கைக்கு வரும்?

©TNNEWS24

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://telegram.me/tnnews24official

Loading...

செய்திகளை உடனே பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து telegram சேனலில் இணைத்து கொள்ளவும்

t.me/tnnews24official
About Tnnews24 3938 Articles
Arun Ramesh, Freelance Journalist, covers Defence & Geo-politics.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*