Connect with us

#24 Exclusive

ராகுல் காந்தியை பொது இடத்தில் வைத்து வெளுக்க வேண்டும் என்று சொன்னது யார் தெரியுமா? கவிழ்கிறதா கூட்டணி?

ராகுல் காந்தியை பொது இடத்தில் வைத்து வெளுக்க வேண்டும் என சாவர்க்கரின் பேரன் ரஞ்சித் சாவர்க்கர் மகாராஷ்டிரா மாநில முதல்வர் உத்தவ் தாக்கரேவிடம் வலியுறுத்தி உள்ளார்.

டெல்லியில் காங்கிரஸ் கட்சி சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ‘ரேப் இன் இந்தியா’ என்று நாட்டின் தற்போதைய நிலையை உலகிற்கு தெரிவித்தமைக்கு நான் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பாஜகவினர் சொல்கிறார்கள், உண்மையைப் பேசியதற்காக நான் ஏன் மன்னிப்பு கேட்கவேண்டும் நான் ஒரு போதும் அவர்களிடம் மன்னிப்பு கேட்க மாட்டேன். நான் மட்டுமல்ல எந்த காங்கிரஸ் காரனும் மன்னிப்பு கேட்க மாட்டான் என்றார்.

அத்துடன் எனது பெயர் ராகுல் காந்தி. ராகுல் சாவர்க்கர் அல்ல என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசினார் ராகுல் இதைத் தொடர்ந்து சாவர்க்கரின் பேரன் ரஞ்சித் சாவர்க்கர், ஆங்கிலேயர்களிடம் எனது தாத்தா ( சாவர்க்கர் )மன்னிப்பு கேட்டதாக திரும்பத் திரும்ப பொய் சொல்கிறார் ராகுல் காந்தி. சிறையிலிருந்து வெளியே வருவதற்கு எனது தாத்தா, பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் போட்ட நிபந்தனைகளுக்கு மட்டும்தான் சம்மதித்தார். ஆனால், அவர் பிரிட்டிஷிடம் எப்போதும் மன்னிப்பு கேட்டதே இல்லை.

Loading...

மேலும் அவர் சிவசேனா கட்சியின் தலைவரும், மகாராஷ்டிரா முதல்வராகவும் இருக்கும் உத்தவ் தாக்கரேவுக்கு சாவர்க்கரைக் கொச்சைப்படுத்தும் யாராக இருந்தாலும் அவர்கள் பொது இடத்தில் நேரடியாக வெளுத்து எடுக்கவேண்டும் என வலியுறுத்தியுள்ளார். மேலும் சிவசேனாவை சேர்ந்த சில தலைவர்களும் தொடர்ந்து சாவர்க்கர் கருத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருவதால் கூட்டணி ஆட்சிக்கு ஏதேனும் ஆபத்து ஏற்படுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

Loading...

©TNNEWS24
 

Loading...

Trending