18 மாத சிறை 18 வருட தண்டனை சபரிமலை செல்ல முயன்ற பாத்திமாவிற்கு கிடைத்த வாழ்நாள் தண்டனை !!

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு அனைத்து வயதுடைய பெண்களும் செல்லலாம் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது அதனை தொடர்ந்து கேரள மாநிலமே போர்க்களமாக மாறியது நாளொரு பெண்ணிய அமைப்பை சேர்ந்தவர்கள் தாங்கள் சபரிமலை செல்லப்போவதாக கிளம்ப அங்கு பெரும் போராட்டங்கள் நடந்தன.

Loading...

அவ்வாறு சபரிமலை செல்ல முயன்றவர்தான் ரெகானா பாத்திமா என்ற முஸ்லீம் பெண் இவர் கேரள மாநில காவல்துறை உதவியுடன் ஐயப்பன் கோவிலுக்கு செல்ல போலீஸ் சீருடையில் சென்றார் அப்போது பக்தர்கள் உள்ளே விடாமல் விரட்டி அடிக்கவே வேறு வழியின்றி கீழே வந்தார், ஐயப்பன் கோவிலுக்குள் சென்ற முதல் இளம் பெண் என்ற பெயரை வாங்க அவர் இந்த செயலை செய்தது அம்பலமானது.

இந்நிலையில் ரெகானா பாத்திமா BSNL நிறுவனத்தில் அரசு பணியாளராக பணியாற்றியவர் என்பது தெரியவந்தது, கேரளா ஐயப்பன் கோவில் விவகாரத்தில் சர்ச்சைக்குரிய வகையில் நடந்துகொண்டதற்காக அவரை அப்போது BSNL நிர்வாகம் சஸ்பெண்ட் செய்தது, தற்போது அவரை நிரந்தரமாக பணியில் இருந்து BSNL நிர்வாகம் வீட்டிற்கு அனுப்பிவிட்டது.

Loading...

இந்நிலையில் தனது முகநூல் பக்கத்தில் 18 படி ஏற நினைத்த எனக்கு 18 மாத சிறை, வாழ்நாள் முழுவதும் வருமானத்தை இழக்கும் சூழலை உண்டாகிவிட்டார்கள் என்று சமூகவலைத்தளத்தில் கதறியுள்ளார், அவரை விரட்டி விட்டது தவறு என சில பெண்ணிய அமைப்புகள் போர்க்கொடி தூக்கியுள்ளன.

ஐயப்பன் கோவில் விவகாரத்தில் சர்ச்சைக்குரிய வகையில் சபரிமலை செல்ல முயன்ற இளம் பெண்கள் வரிசையாக பாதிக்கப்பட்டு வருவதுடன் அவர்களின் சொந்த குடும்பங்களே அவர்களை விரட்டி விட்ட நிகழ்வுகள் அரங்கேறி வருகின்றன. ஐயப்பன் நம்பிக்கையில் தலையிட்ட ஒவ்வொருவரும் வாழ்க்கையை இழந்து வருவது பெரும் அதிர்ச்சியை உண்டாக்கி வருகிறது.

©TNNEWS24

Loading...
About Tnnews24 2646 Articles
Arun Ramesh, Freelance Journalist, covers Defence & Geo-politics.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*