கொரோனாவால் பாதிக்கப்பட்ட 18 குழந்தைகளின் நிலை என்ன? ராகவா லாரன்ஸ் தகவல்!

கொரோனாவால் பாதிக்கப்பட்ட 18 குழந்தைகளின் நிலை என்ன? ராகவா லாரன்ஸ் தகவல்!

Loading...

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராகவும் இயக்குனராகவும் அறியப்படும் ராகவா லாரன்ஸ் நடத்தும் டிரஸ்ட் ஒன்றில் இருக்கும் குழந்தைகள் மற்றும் பணியாளர்களுக்கு கொரோனா தொற்று உறுதியானது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே இருக்கிறது. இதுவரை பாதிப்பு எண்ணிக்கை 27,000 ஐ தாண்ட, சென்னையில் மட்டும் 18,000 பேருக்கு மேல் பாதிக்கப்பட்டுள்ளனர். நாளுக்கு நாள் சென்னையில் 1000 பேருக்கு மேல் கொரோனா தொற்று கண்டறியப்பட்டு வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Loading...

இந்நிலையில் சென்னையில் நடிகர் ராகவா லாரன்ஸ் நடத்தும் அறக்கட்டளையில் இருக்கும் குழந்தைகள் மற்றும் பணியாளர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த ட்ரஸ்ட்டில் இருக்கும் 15 மாணவ மாணவிகளுக்கும், 3 பணியாளர்களுக்கும் 2 சமையல் காரர்களுக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டு சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள லயோலா கல்லூரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த செய்தியானது மிகுந்த சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து அந்த குழந்தைகளுக்கு தேவையான சிகிச்சை உதவிகள் வழங்கப்படும் என அமைச்சர் வேலுமணி தெரிவித்திருந்தார். ஒரு வாரத்துக்கும் மேலாக சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் இப்போது குழந்தைகள் முழுவதும் குணமாகியுள்ளனர்.

இந்த செய்தியை நடிகர் ராகவா லாரன்ஸே பகிர்ந்து கொண்டுள்ளார். அவருடைய பதிவில் ‘ரசிகர்களே, ஒரு நல்ல செய்தியை பகிர்ந்துகொள்ள போகிறேன். கொரோனாவால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு தற்போது தொற்று இல்லை என்பது உறுதியாகியுள்ளது. அவர்கள் அனைவரும் காப்பகம் திரும்பியுள்ளனர். நான் நம்பியது போல எனது சேவை என் குழந்தைகளைக் காப்பாற்றிவிட்டது. அவர்களுக்காக பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி. சேவையே கடவுள். உதவி செய்த அமைச்சர் வேலுமணி மற்றும் ஜி வி பிரகாஷ் ஆகியோருக்கு நன்றி’ எனக் கூறியுள்ளார்.

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*