Connect with us

#24 Exclusive

நான் ராயபுரம், என்னாலும் மோசமாக முடியும்: சீமானுக்கு ராகவா லாரன்ஸ் எச்சரிக்கை

நான் ராயபுரம் பகுதியை சேர்ந்தவன், என்னால் உங்களை விட மோசமான பேச முடியும் என்று ராகவா லாரன்ஸ் சீமானுக்கு எச்சரிக்கை விடும் வகையில் பேசியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

நேற்று நடைபெற்ற ரஜினி பிறந்த நாள் விழாவில் பேசிய ராகவா லாரன்ஸ் அவர்கள் கூறியதாவது ’ஓபிஎஸ் அவர்கள் எங்கேயோ இருந்தார், திடீரென முதல் அமைச்சர் ஆனார். அவருடைய கர்மம் நன்றாக இருக்கிறது முதல்வராக இருக்கின்றார். அதேபோல் போன ஜென்மத்தில் புண்ணியம் செய்த எடப்பாடி பழனிச்சாமி அவர்களும் முதலமைச்சராக உள்ளார். இதைப் பார்த்து பொறாமைப் படக்கூடாது. அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம். கடவுள் ஆசிர்வாதம், மக்கள் முடிவும் இருந்தால் யாரும் அரசியலுக்கு வருவதை தடுக்க முடியாது

உதயநிதி ஸ்டாலின் அவர்களும் வரலாம், அவரைப்போல் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம், ஆனால் அரசியல் மட்டுமே பேசவேண்டும். அரசியல் விமர்சனம் செய்தது தவறில்லை. ஆனால் தனிமனித தாக்குதல் என்பது மிகவும் தவறு என்று கூறினார்

Loading...

மேலும் ஒருவரை அரசியலுக்கு வரக்கூடாது என்று பேசுவதற்கு யாருக்கும் உரிமை இல்லை. எனக்கு மட்டுமே அனைத்தும் தெரியும். மற்றவர்களுக்கு எதுவுமே தெரியாது என்று கூறுவதற்கு யாருக்கும் உரிமை கிடையாது. ஒரு ஓட்டப் பந்தயத்தில் பத்து பேர்களுடன் ஓடி வெற்றி பெற்றால் மட்டுமே அது உண்மையான வெற்றி. ஒரே ஒருவர் மட்டும் ஓடி வெற்றி பெறுவதற்கு பெயர் வெற்றி அல்ல. யார் வந்தாலும் அவருடைய கொள்கைகளை விமர்சனம் செய்யுங்கள், அரசியல் ரீதியில் விமர்சனங்கள் வைக்கலாம். அது தவறு கிடையாது. ஆனால் தனிப்பட்ட முறையில் பேசினால் நான் இனிமேல் பொறுத்துக்கொள்ள மாட்டேன்

Loading...

என் பின்னால் ரஜினி என்ற மூன்றெழுத்து உள்ளது. மேலும் சீமான் பெயர் சொல்வதற்கு உங்களுக்கு ஏன் தயக்கம் என்று சிலர் கேட்டார்கள். எனக்கு எந்தவித தயக்கமும் கிடையாது. அவர் பெயரைச் சொல்லி தான் நான் என்னுடைய திறமையை என்னுடைய வீரத்தை நிரூபிக்க வேண்டும் என்று அவசியமில்லை

மேலும் சீமானுடன் ஒன்றை சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். நான் ராயபுரத்துக்காரன். என்னால் உங்களைவிட மோசமாக பேச முடியும். ஆனால் ரஜினி என்ற என் தலைவன் என்னை அப்படி வளர்க்கவில்லை. அதனால் பொறுமை காத்து கொள்கிறேன். ஆனாலும் தர்மம் ஓரளவுதான் பொறுக்கும். இதைவிட எல்லை மீறினால் நாங்கள் இனிமேல் சும்மா இருக்க மாட்டோம் என்று சீமானுக்கு ராகவா லாரன்ஸ் நேரடியாக எச்சரிக்கை விடுத்து உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

Loading...
Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending