Connect with us

#24 Exclusive

ஊடகங்கள் சொல்வது அனைத்தும் பொய் உண்மையை உடைத்த ரபியா !

பாண்டிச்சேரி பல்கலைக்கழக மாணவி ரபியா நேற்று அவரது பல்கலைக்கழகத்தில் நடந்த பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டார் அங்கு அவருக்கு தங்கப்பதக்கம் வழங்கயிருந்த நிலையில் அவர் இஸ்லாமிய பெண்கள் அணியும் ஹிஜாப் அனைத்து வந்துள்ளார்

அதனால் அந்த ஹிஜாபை அகற்றிவிட்டு வந்து தங்கப்பதக்கத்தை பெற்றுக்கொள்ளுமாறு கூறியதாகவும் அதற்கு மறுப்பு தெரிவித்து தங்கப்பதக்கத்தை வேண்டாம் என்று மறுத்துவிட்டு மாணவி வெளியேறியதாக ஊடகங்களில் செய்தி வெளியானது . அதைத்தொடர்ந்து அந்த மாணவி குடியுரிமை சட்டத்திருத்தம் CAB எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தங்கப்பதக்கத்தை வாங்கவில்லை என்ற செய்தி வெளியானது

இந்த செய்தியை எதிர்கட்சி சார்புடைய ஊடகங்கள் பெரிதாக ஒளிபரப்பிய நிலையில் இப்போது அந்த மாணவி ரபியா சமூகவலைத்தளம் மூலம் விளக்கமளித்துள்ளார் அதில் தான் அணிந்திருந்த ஹிஜாபை யாரும் அகற்றச்சொல்லவில்லை என்றும் . தான் CAB எதிர்ப்புக்காக தங்கப்பதக்கத்தை வேண்டாம் என்றும் சொல்லவில்லை என்றும் தான் எதற்காக வெளியேற்றப்பட்டேன் என்று தனக்கே தெரியவில்லை என்றும் கூறியுள்ளார் .

Loading...

குறிப்பாக தன்னுடைய ஹிஜாபை கழற்றுபடி கூறியதாக வந்த தகவல் முற்றிலும் போலியானது என்றும் கூறியுள்ளார் . ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதுபோல தமிழ் ஊடகங்களின் நிலையை இந்த ஒரு செய்தியே தெளிவாக உணர்த்திவிட்டது . மாணவி உள்ளே அனுமதிக்கவில்லை என்றும் குடியரசு தலைவர் விருதினை வழங்கவில்லை என்று கூறி வாங்கமறுத்தார் என்பதே குறிப்பிடத்தக்கது.

Loading...
Loading...
Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending