மீ டூ வால் எதுவும் நடக்கவில்லை – ஆதங்கப்பட்ட நடிகை !

மீ டூ வால் எதுவும் நடக்கவில்லை – ஆதங்கப்பட்ட நடிகை !

மீ டூ வால் எதுவும் நடக்கவில்லை – ஆதங்கப்பட்ட நடிகை !

இந்தி மற்றும் தமிழ் சினிமாவில் பிரபலங்கள் மேல் சொல்லப்பட்ட மீ டூ குற்றச்சாட்டுகள் நமுத்து போய் விட்டதாக பிரபல நடிகை ராதிகா ஆப்தே தெரிவித்துள்ளார்.

ஹாலிவுட்டில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் திரையுலகில் பாலியல் தொல்லைகளுக்கு ஆளான பெண்கள் தங்கள் மீது நடந்த பாலியல் குற்றச்சாட்டுகளை வெளி உலகுக்குக் கொண்டு வந்தனர். இதில் பல பிரபலமானவர்கள் சிக்கினர். இந்த குற்றச்சாட்டுகள் மீ டூ முவ்மெண்ட் என்ற பெயரில் இந்தியாவுக்கும் கடந்த ஆண்டு வந்தன.

Loading...

இந்தி சினிமாவில் நானா படேகர் உள்ளிட்டவர்கள் பெயர் அடிபட தமிழில் வைரமுத்து மற்றும் ராதாரவி ஆகியோரின் மீது குற்றச்சாட்டு எழுப்பப்பட்டது. அப்போது பரபரப்பாக பேசப்பட்ட இந்த மி டூ இப்போது நமுத்துப் போய்விட்டதாக பிரபல நடிகை ராதிகா ஆப்தெ தெரிவித்துள்ளார்.

Loading...

சமீபத்தில் நடந்த ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பில் ‘மீ டூ கிளம்பிய போது மிகவும் சந்தோஷப்பட்டேன். நிறைய பேர் இதில் மாட்டி தண்டனை அனுபவிப்பார்கள் என்று. ஆனால் அப்படி எதுவுமே நடக்கவில்ல. இதனால் பாலிவுட்டில் எந்த மாற்றமும் நிகழவில்லை. மீ டூ நீர்த்துப் போய்விட்டது’ எனக் கூறியுள்ளார்.

Loading...

24 Cinema

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *