ராதாரவியின் புழுக்கை விமர்சனத்திற்கு கடலூரில் உதயநிதி பதிலடி !! எங்க டாடிதான் எனவும் பீற்றல் !!

பாஜக சார்பில் செங்கல்பட்டில் குடியுரிமை திருத்த சட்டம் குறித்து நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் நடிகரும் பாஜகவை சேர்ந்தவருமாகிய ராதாரவி கலந்து கொண்டு உரையாற்றினார் தனது உரையில் கடுமையாக குடியுரிமை சட்டத்தை எதிர்த்த திமுகவை விமர்சனம் செய்த அவர் ஒரு கட்டத்தில் ரஜினியை உதயநிதி விமர்சனம் செய்ததற்காக கடுமையான தனது கண்டனங்களை பதிவு செய்தார்.

Loading...

ரஜினி வாழ்க்கை வரலாற்றை பேசும் நீ உன் தாத்தா வரலாறை படி கண்ணதாசன் உன் தாத்தா குறித்து எழுதிய புத்தகத்தை படித்தால் இவ்வாறு பேசமாட்டாய் எனவும் கடுமையாக விமர்சனம் செய்திருந்தார், அத்துடன் நீ ரஜினியுடன் ஒப்பிடுகையில் ஒரு புழுக்கை எனவும் கடுமையாக தனது கருத்தினை பதிவுசெய்திருந்தார் அந்த பொதுக்கூட்ட பேச்சு இணையத்தில் கடும் வைரலாக பரவியது.

இந்நிலையில் இன்று கடலூர் மாவட்டம் வடலூரில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி இளைஞர் அணி நிர்வாகிகள் இடையே பேசினார் அப்போது பேசிய அவர் நாங்கள் வார்டு மெம்பெர் லிஸ்டை வைத்து உறுப்பினர்களை சேர்க்கவில்லை, நேரடியாக களத்தில் சென்று இளைஞர் அணிக்கு 20 லட்சம் உறுப்பினர்களை சேர்த்திருக்கிறோம் என்று கூறினோம் அதற்கு தலைவர் இன்னும் கூடுதலாக 30 லட்சம் உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளதாக கூறி பெருமை அடைந்தார்.

Loading...

மேலும் பேசிய அவர் சிலர் நம்மை விமர்சனம் செய்வதாக அண்ணன் பேசினார் அவர்களை பற்றி கவலை கொள்ள வேண்டாம், அத்துடன் கந்து வட்டி வருகிறோம் வருகிறோம் என சொல்பவரை நினைத்து நீங்கள் கவலை கொள்ள வேண்டாம் அவர் நான் படிக்கும் காலத்தில் இருந்தே அதைத்தான் சொல்லி வருகிறார், வந்தால் பார்ப்போம் எனவும் மறைமுகமாக விமர்சனம் செய்திருந்தார் (இதற்கு முன்னர் பேசிய திமுக நிர்வாகி ராதாரவி பேச்சினை குறிப்பிட்டு பேசியது குறிப்பிடத்தக்கது. )

மேலும் பேசிய அவர் கேடு கெட்ட அதிமுக பாஜக ஆட்சியை அகற்றுவதே நமது இலக்கு எனவும், மக்கள் தமிழகத்தில் ஸ்டாலின் முதல்வர் எப்போது ஆவார் என காத்து கொண்டு இருப்பதாகவும் அதற்காக போட்ட வாக்குகள்தான் கடந்த நாடாளுமன்ற தேர்தல் வாக்குகள் என குறிப்பிட்டார், அத்துடன் மேலும் பேசியவர் இந்தியாவிற்கே மோடி என்றாலும் தமிழ்நாட்டில் என் டாடி தான் என தற்பெருமை பேசினார்.

இதற்கு முன்னர் நடிகை நயன்தாரா குற்றச்சாட்டின் பேரில் ராதாரவி மீது உதயநிதி கட்சி ரீதியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியது குறிப்பிடத்தக்கது.

©TNNEWS24

Loading...

செய்திகளை உடனே பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து telegram சேனலில் இணைத்து கொள்ளவும்

t.me/tnnews24official
About Tnnews24 2698 Articles
Arun Ramesh, Freelance Journalist, covers Defence & Geo-politics.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*