Connect with us

Uncategorized

ஹாலிவுட் என்று சொன்னால் மட்டும் போதாது – விபத்தில் பலியானவர்களுக்கு ராதாரவி அஞ்சலி

இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பின் போது கிரேன் கீழே விழுந்து பலியானவர்களின் அஞ்சலி கூட்டத்தில் கலந்துகொண்ட ராதாரவி தொழிலாளர்களின் பாதுகாப்பு குறித்து பேசியுள்ளார்.

கமல் நடிக்கும் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு சென்னையை அடுத்த பூந்தமல்லியில் கடந்த ஒரு வார காலமாக நடந்து வந்தது. நேற்று முன்தினம் எதிர்பாராத விதமாக படப்பிடிப்புக்கு பயன் படுத்தப்பட்ட கிரேன் அறுந்து விழுந்து உதவி இயக்குனர் கிருஷ்ணன், உதவி ஒளிப்பதிவாளர் மது, மற்றும் உணவு தயாரிப்பாளர் சந்திரன் ஆகியோர் மரணமடைந்தனர். மேலும் பத்துக்கும் மேற்பட்டோர் படுகாமடைந்தனர். அவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதையடுத்து உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி கூட்டம் சென்னையில் நடைபற்றது. அதில் டப்பிங் யூனியன் சங்க தலைவர் ராதாரவி கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியார்களிடம் பேசிய அவர் ,’ நண்பர் கமல் உயிர் இழந்தவர்களுக்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்கியுள்ளது பாராட்டுக்குரியது. அவர் எபபோதும் தொழிலாளர்கள் பக்கம் நிற்பவர். நாமெல்லாம் ஹாலிவுட் தரத்தில் படம் எடுக்கிறோம். அவர்களை போல தொழிலாளர்களுக்கு பாதுகாப்பையும் ஏற்படுத்தி தர வேண்டும் ‘ எனக் கூறியுள்ளார்.

Loading...
Loading...
Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending