Connect with us

#24 Exclusive

அனைத்தையும் போட்டுடைத்த ராதாரவி மீண்டும் அரசியலில் பரபரப்பு !

Published

on

சென்னை :- நடிகர் ராதாரவி தனியார் தொலைக்காட்சியான “WIN NEWS” தொலைக்காட்சிக்கு சமீபத்தில் பேட்டி ஒன்றிணை அளித்திருந்தார். தற்போது அதில் மிசா முதல் நயன்தாரா வரை அனைத்து கேள்விகளுக்கும் வெளிப்படையாக பதில் அளித்திருக்கிறார்.

தற்போது தமிழக அரசியலில் ராதாரவியின் பேட்டி மீண்டும் பரபரப்பை கிளப்பியுள்ளது. நடிகை நயன்தாரா குறித்து ராதாரவி ஒரு கருத்து தெரிவிக்க அதற்கு நீதி வழங்குவதாக கூறி திமுக தலைமை நடிகர் ராதாரவியை இடைநீக்கம் செய்தது, ஆனால் அது குறித்து கடுமையாக விமர்சனம் செய்த ராதாரவி நான் புள்ளிவிவரங்களை சொல்லவா எங்கு யாரை எப்படி பேசினார்கள் என்று கூறி கட்சியில் இருந்தே வெளியேறினார்.

Loading...

இந்த சூழலில்தான் தற்போது மதனின் நேர்காணல் நிகழ்ச்சியில் பங்கேற்ற ராதா ரவி, மிசா காலத்தில் சிறை சென்ற தனது தந்தையிடம் சிறை சென்றதற்கான ஆவணங்கள் இருப்பதாக கூறினார், ஆனால் ஸ்டாலினிடம் இருக்கிறதா என்று தெரியவில்லை என பதிலளித்துள்ளார்.

Loading...

மேலும் கருணாநிதி எழுதிய நெஞ்சுக்கு நீதி புத்தகத்தில் ஸ்டாலின் பெயர் உள்ளதே என்ற கேள்விக்கு, அது கலைஞர் நெஞ்சு ஏன் பொய் சொல்லாத எனவும் அதிரடியாக தெரிவித்துள்ளார்., மேலும் நடிகை நயன்தாரா விவகாரத்தை பற்றி மதன் கேள்வி எழுப்ப அதற்கு ராதாரவி சொன்ன பதில் மீண்டும் புயலை கிளப்பியுள்ளது, திமுக உறுப்பினர்களிடம் சொல்லிவிட்டுத்தான் வந்தேன் நீங்கபாட்டு யாரையும் எதிர்த்து பேசிவிடாதீர்கள் ! யாருக்கு யாருடன் என்ன உறவு இருக்கிறது என்றே தெரியாது என சட்டென கூறியுள்ளார்.

தற்போது இந்த விவாத நிகழ்ச்சியில் மிசா முதல் நயன்தாரா வரை, ஸ்டாலின் சிறை சென்ற விவகாரம் முதல் அனைத்தையும் போட்டுடைத்துள்ளார், ராதாரவி. ஏற்கனவே பஞ்சமி நிலவிவகாரம் என பல்வேறு சிக்கல்களில் திமுக சிக்கி நிற்க இப்போது கூடுதலாக நயன்தாரா விவகாரம் என்ன பாடுபடுத்த போகிறதோ என குழப்பத்தில் உள்ளனராம் திமுகவினர்.

©TNNEWS24

Loading...
Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

error: Content is protected !!

Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home/tnnews24/public_html/wp-includes/functions.php on line 4552