சொல்லி சரியாக 24 மணி நேரம் ஆர் எஸ் பாரதி கைது செய்யப்பட்டதன் பரபர பின்னணி !!

திமுக அமைப்பு செயலாளர் ஆர். எஸ். பாரதி கைது செய்யப்பட்டது திமுகவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது, சென்னையில் உள்ள அவரது வீட்டில் இன்று அதிகாலை மத்திய குற்றப்பிரிவு போலீசார் ஆர். எஸ். பாரதியை கைது செய்தனர்.

Loading...

கடந்த பிப்ரவரி மாதத்தில் தலித்துகள் குறித்து சர்ச்சையாக பேசிய காரணத்தால் கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் ஆர். எஸ் பாரதியை வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து இருப்பதாக மத்திய குற்ற பிரிவு காவல்துறை விளக்கம் அளித்துள்ளது, அவருக்கு மருத்துவ பரிசோதனை முடிந்த பின்பு வழக்கமான சட்ட நடவடிக்கைகள் தொடங்கும் என போலீசார் விளக்கம் அளித்துள்ளனர்.

இந்த நிலையில் ஆர். எஸ். பாரதி கைது செய்யபட்டதற்கு இரண்டு முக்கிய காரணங்கள் சொல்லப்படுகிறது, அதில் முக்கியமானது, தொடர்ந்து திமுகவினர் பட்டியல் சமூகத்தை சேர்ந்த மக்களை சர்ச்சையாக விமர்சனம் செய்து வருவதும் அதன் மீது புகார் அளித்தும் மாநில அரசு நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கை பார்ப்பதாக பலர் குற்றம் சாட்டியதும் ஒரு காரணம் எனவும் கூறப்படுகிறது.

Loading...

அதேபோல் மற்றொரு அரசியல் காரணமும் கூறப்படுகிறது, துணை முதல்வர் பன்னீர் செல்வம் அதிமுகவில் தொடர் அதிரடி மாற்றங்களில் ஈடுபட்டு வருகிறார், மாநில it wing 4 அமைப்பாக பிரிக்கப்பட்டது, ஊராட்சி பதவிகள் முழுவதும் நீக்கப்பட்டது அதனை தொடர்ந்து ஒரு தரப்பிற்கு ஆதரவாக செயல்படும் மற்றும் செயல்படாத மாவட்ட செயலாளர்களை மாற்ற திட்டமிட்டு நேரடியாக எடப்பாடி பழனிசாமியிடம் தெரிவித்துவிட்டு அதிரடியாக மாற்றி வருவதாக ஆளும்கட்சி தரப்பிலேயே கூறப்படுகிறது.

இந்நிலையில்தான் நேற்று திமுக அமைப்பு செயலாளர் ஆர். எஸ் பாரதி துணை முதல்வர் மீது ஊழல் குற்றசாட்டு குறித்து புகார் அளித்தார், அதனை தொடர்ந்துதான், ஆர். எஸ் பாரதி 24 மணி நேரத்திற்குள் பழைய வழக்குகளை தூசி தட்டி தற்போது கைது செய்யப்பட்டிருப்பதாகவும், ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடித்து இருப்பதாகவும் கூறப்படுகிறது.

விரைவில் அரசியலில் அதிரடி மாற்றங்கள் இது போன்று அரங்கேறும் என்று கூறப்படுகிறது, இந்நிலையில் இதே போன்று தாழ்த்தப்பட்டவர்கள் குறித்து சர்ச்சையாக பேசிய தயாநிதி மாறன் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வரும் சூழலில் முன் ஜாமீன் பெற தயாநிதி குழுவினர் கிளம்பிவிட்டதாக கூறப்படுகிறது.

திமுக சார்பில் இது ஓபிஎஸ்சின் அரசியல் பழிவாங்கும் செயல் என விமர்சனம் செய்யப்பட்டுள்ளது.

©TNNEWS24

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*