திமுக அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி கைது… வன்கொடுமை தடுப்புச் சட்டம்!

திமுக அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி கைது… வன்கொடுமை தடுப்புச் சட்டம்!

Loading...

திமுகவின் அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி இட ஒதுக்கீடு பற்றியும், நீதிபதிகள் பற்றியும் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்காககக் கைது செய்யப்பட்டார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஆர் எஸ் பாரதி, இட ஒதுக்கீடு என்பது திமுக போட்ட பிச்சை எனவும் அதனால் இப்போது ஒடுக்கப்பட்ட மக்கள் நீதிபதியாக இருப்பதாகவும் பேசினர். அவரின் இந்த பேச்சு பலத்த சர்ச்சைகளை எழுப்பிய நிலையில் பல அரசியல் தலைவர்களும் கண்டனம் தெரிவித்தனர். இது பட்டியல் சமூக மக்களை புண்படுத்தும் விதமாக உள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதையடுத்து திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மீது எஸ்.சி.மற்றும் எஸ்.டி வன்கொடுமை சட்டத்தின் கீழ் வகைப்படுத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என,தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. தன்னுடைய பேச்சு குறித்து அவர் வருத்தம் தெரிவித்திருந்தார்.

Loading...

இந்நிலையில் இன்று காலை ஆர் எஸ் பாரதி தனது வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். இன்று அதிகாலை அவர் வீட்டில் வைத்து காவலர்கள் அவரைக் கைது செய்துள்ளனர். இது திமுக தொண்டர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*