எங்க புல்லட் பாண்டி அதுக்கு சரியா இருப்பார் – ஐசிசி யைக் கலாய்த்த அஸ்வின் !

எங்க புல்லட் பாண்டி அதுக்கு சரியா இருப்பார் – ஐசிசி யைக் கலாய்த்த அஸ்வின் !

Loading...

ஐசிசி டிவிட்டரில் கேட்ட கேள்வி ஒன்றில் அஸ்வினின் பதில் தமிழ் ரசிகர்களால் பெரிதும் ரசிக்கப்பட்டு வருகிறது.

உலகத்தையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் கடத்த சில நாட்களாக இந்தியாவில் தனது கிளையை விரிவுபடுத்தியுள்ளது . இந்த வைரஸ் தாக்கத்தால் இதுவரை 95000 பேருக்கும் மேல் உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ள நிலையில் . இந்தியாவில் இதுவரை 5800 க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது. இந்தியாவில் பலி எண்ணிக்கை 100 ஐ தாண்டியுள்ளது.

Loading...

இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைக் காரணமாக ஐபிஎல் உள்ளிட்ட அனைத்து சர்வதேசக் கிரிக்கெட் போட்டிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இனிமேல் எப்போது மீண்டும் கிரிக்கெட் போட்டிகள் தொடங்கும் என்ற ஆர்வத்தில் ரசிகர்களும் வீரர்களும் காத்திருக்கின்றனர். இந்நிலையில் ஐசிசி தனது சமூகவலைதளப்பக்கத்தில் ‘வேறு விளையாட்டுகளில் பங்கு பெறும் எந்த வீரர் கிரிக்கெட்டிற்கு சரியான தேர்வாக இருப்பார்?” என ஒருக் கேள்வியை எழுப்பியிருந்தது.

அதற்குப் பதிலளித்த தமிழகத்தைச் சேர்ந்த அஸ்வின் ‘கோவில் படத்தில் சிலம்பம் மாஸ்டாக இருக்கும் புல்லட் பாண்டி எப்படி இருப்பார்?…. உங்களின் விருப்பம் யார்?’ எனக் கேட்டுள்ளார். இதை ரசிகர்கள் பலரும் ரசித்து பகிர்ந்து வருகின்றனர். ரவிச்சந்திரன் அஸ்வின் தமிழ் சினிமாக்களின் மிகப்பெரிய ரசிகர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://telegram.me/tnnews24official

Loading...

செய்திகளை உடனே பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து telegram சேனலில் இணைத்து கொள்ளவும்

t.me/tnnews24official
About Tnnews24 3942 Articles
Arun Ramesh, Freelance Journalist, covers Defence & Geo-politics.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*