Connect with us

#24 Exclusive

புஸ்பவனம் குப்புசாமி மகளுக்கு ஏற்பட்ட சோகம் உண்மையா?

பிரபல நாட்டுப்புற பாடகரும் திரைப்பட பாடகருமான புஷ்பவனம் குப்புசாமி, தனது மனைவி அனிதா குப்புசாமியுடன் சென்னை ராஜா அண்ணாமலைபுரம் விஸ்வநாதன் தெருவில் வசித்து வருகிறார். இத்தம்பதிக்கு பல்லவி என்ற மகள் இருக்கிறார். மருத்துவத்துறையில் பட்டப்படிப்பு படித்து வருகிறார் பல்லவி.

இந்நிலையில் தனது மூத்த மகள் பல்லவியை நேற்று இரவில் இருந்து காணவில்லை என புஷ்பவனம் குப்புசாமி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளதாக செய்திகள் வந்தது இதனால் அவர்களது உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் பதற்றம் அதிகரித்துள்ளது, நேற்று இரவு அவரது தங்கையுடன் ஏற்பட்ட சண்டையின் காரணமாக கோவித்து கொண்டு வீட்டை விட்டு வெளியேறியதாக கூறப்பட்டது.

ஆனால் தான் காணாமல் போகவில்லை என்றும் தன்னைப்பற்றி பொய்யான தகவல்கள் பரவுவதாக தனது facebook பக்கத்தில் பல்லவி விளக்கம் அளித்துள்ளார், இதனால் என்ன நடக்கிறது என தெரியாமல் குழப்பம் நீடிக்கிறது, இதுகுறித்து புஸ்பவனம் குப்புசாமிதான் விளக்கவேண்டும்.

Loading...

மூத்தமகள் பல்லவி மருத்துவராக பயின்று வருகிறார், இவர் சமூகவலைத்தளங்களில் அவரது பெற்றோருடன் சேர்ந்து பல விழிப்புணர்வு நிகழ்ச்சிகளிலும் ஈடுபட்டு வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Loading...

©TNNEWS24

Loading...
Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending