Connect with us

சர்ச்சைகள்

கமல் கொடுத்த முத்தம் – 34 ஆண்டுகளுக்கு பின் இப்போது பிறந்த சர்ச்சை !

கமல் கொடுத்த முத்தம் – 34 ஆண்டுகளுக்கு பின் இப்போது பிறந்த சர்ச்சை !

புன்னகை மன்னன் படத்தில் இடம்பெறும் முத்தக்காட்சியில் நடித்த போது அதை பற்றி தாம் முன்பே அறிந்திருக்கவில்லை என நடிகை ரேகா தெரிவித்துள்ளார்.

புன்னகை மன்னன் திரைப்படம் கமலின் காதல் காவியப் படங்களில் மிக முக்கியமானது. இந்த படத்தை கமலின் குருநாதரான பாலச்சந்தர் இயக்கி இருந்தார். இந்த படத்தில் இடம்பெற்ற என்ன சத்தம் இந்தநேரம் பாடலும் அந்த பாடலின் இடையில் வரும் முத்தக் காட்சியும் மிகவும் பிரபலம். இந்த படம் வெளியாகி 34 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் அந்த முத்தக்காட்சி குறித்து ரேகா சமீபத்தில் பேசியது சில சர்ச்சைகளை உண்டாக்கியுள்ளது.

Loading...

ரேகா அளித்த ஒரு நேர்காணலில், ‘அந்த முத்தக் காட்சி பற்றி முன்னதாகவே எனக்கு தெரியப்படுத்த படவில்லை. காட்சிக்கு ‘கமலிடம், பாலச்சந்தர் நான் சொன்னது ஞாபகம் இருக்கிறதா என்று கேட்டார்.?’ ஒன்-டூ-த்ரீ சொன்னதும் கமல் முத்தம் கொடுத்துவிட்டார். நான் அதிர்ச்சியடைந்துவிட்டேன். நான் பாலச்சந்தரின் உதவியாளர்களிடம் இதுபற்றிக் கேட்டேன். அந்த காட்சி நன்றாக இல்லை என்றால் சென்ஸாரில் இருந்து தூக்கிவிடுவார்கள்என்றார்கள். நான் ’சென்சார் என்றால் என்ன ?’ எனக் கேட்டேன். அப்போது எனக்கு 16 வயதுதான்’ எனக் கூறினார்.

Loading...

அந்த நேர்காணல் சமூக வலைதளங்களில் வைரல் ஆக, 16 வயது பெண்ணிடம் அவர் அனுமதி இல்லாமல் இப்படி ஒரு காட்சியை எடுத்தது தவறு என்றும் அதற்காக கமல் மற்றும் பாலச்சந்தரின் உதவியாளர்களான வசந்த் மற்றும் சுரேஷ் கிருஷ்ணா ஆகியோரும் மன்னிப்புக் கேட்கவேண்டும் என கருத்துகள் எழுந்துள்ளன.

Loading...
Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending