தமிழகம் எடுக்கும் முடிவைப் பொறுத்து ஊரடங்கு நீட்டிப்பு!! புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி !!

தமிழகம் எடுக்கும் முடிவைப் பொறுத்து ஊரடங்கு நீட்டிப்பு!! புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி !!

Loading...

இந்தியாவில் தற்போது கொரோன தொற்றில் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4,90,401-லிருந்து 5,08,953-ஆக அதிகரித்து உள்ளது. இந்தியாவில் கொரோன தொற்று நாளுக்கு நாள் அதிகரிக்கும் வகையில், அதிக பாதிப்பு உள்ள மாநிலங்கள் ஆன மகாராஷ்டிரா, தமிழகம் ஆகும். இத்தொற்று பரவலை தடுக்க கடந்த மார்ச் முதல் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டு வருகின்றன.

தற்போது 5 ஆம் கட்ட ஊரடங்கு அமுலில் சில தளர்வுகள் விதிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தி வருகின்றன. இந்நிலையில் வரும் ஜூன் 30 தேதி வரை ஊரடங்கு முடிவடைகிறது, மேலும் இத்தொற்று பரவல் கட்டுப்பாட்டில் கொண்டு வர மேற்கு வங்காள முதலமைச்சர் மம்தா பானர்ஜி, தலைமையில் கொரோனா பாதிப்பு குறித்து ஆலோசனை நடத்தியதில் ஜூலை 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக முதலமைச்சர் அறிவித்தாரர்.இருப்பினும் வரும்

Loading...

ஊரடங்கில் வணிக வளாகங்கள் மற்றும் உணவகங்கள் மற்றும் பிற நிறுவனங்கள் மட்டும் திறக்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளன என குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து அதிக பாதிப்புக்கு உள்ள மாநிலம் தமிழகம் ஆகும். தற்போது ஒரே நாளில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 3,645 பேர் ஆகும். நாளுக்கு நாள் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றன. தமிழகத்தில் அதிக பாதிப்பு உள்ள மாவட்டங்கள் ஆன சென்னை உள்ளிட்ட 3 மாவட்டங்களுக்கு

தீவிர கண்காணிப்பில் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டு வருகிறது. இருப்பினும் தமிழகத்தில் 4 மாவட்டங்கள் தவிர மேலும் 4 மாவட்டங்களுக்கு தொற்று பரவல் வேகமாக அதிகரித்து வரும் நிலையில் மதுரை, தேனி ஆகிய மாவட்டங்களில் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டு வருகின்றன. தற்போது தமிழகத்தில் கொரோன தொற்று பாதிப்பு குறித்து தமிழக முதலவர் மருத்துவ குழு நிபுணர்களுடன் கலந்து ஆலோசனை செய்த பிறகே ஊரடங்கு

நீட்டிப்பு குறித்து மக்களுக்கு அறிவிக்கப்படும் என்று தெரிவித்து இருந்தார், இந்நிலையில் அண்டை மாநிலமான புதுச்சேரியிலும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால், புதுச்சேரியில் முழு ஊரடங்கை நீட்டிப்பது பற்றி ஜூன் 30ல் முடிவு செய்யப்படும் என்றும், பின்பு மத்திய அரசு உத்தரவு மற்றும் தமிழக அரசு எடுக்கும் முடிவில் புதுச்சேரியில் ஊரடங்கு நீட்டிப்பு குறித்து நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்து உள்ளார் என குறிப்பிடத்தக்கது.

Loading...

செய்திகளை உடனே பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து telegram சேனலில் இணைத்து கொள்ளவும்

t.me/tnnews24official

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*