மதசார்பின்மை மண்ணாங்கட்டியெல்லாம் தூக்கி போடு கிருஷ்ணசாமி அதிரடி ! இனி யாராவது கேள்வி கேட்பீர்கள்?

Loading...

சமூகவலைத்தளம்.,

புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் கிருஷ்ணசாமி சமீப காலமாக அதிரடியாக கருத்துக்களை தெரிவித்து வருகிறார், இதற்கு முன்னர் தமிழர்களின் பாரம்பரியத்தை பாதிரியார்கள் அபகரிக்க நினைப்பதாகவும் அதனை நாம் தடுத்து நிறுத்தவேண்டும் என்று அதிரடியாக கருத்து தெரிவித்திருந்தார்.

Loading...

மேலும் தற்போது இந்தியாவில் மதமாற்ற தடுப்பு சட்டத்தை மத்திய அரசு கொண்டுவர இருப்பதாக தகவல் வெளியான நிலையில் அதனை ஒட்டி டாக்டர் கிருஷ்ணசாமி கருத்து தெரிவித்துள்ளார். அதில் மதசார்பின்மை என்று கூறி பெரும்பாண்மை சமூகம் பாதிக்கப்படுவதாகவும் விளக்கியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை பின்வருமாறு :-

இந்தியாவினுடைய பாரம்பரியமும்- ‘இந்து’ பாரம்பரியம்.

மதசார்பற்ற நாடாக இருக்க வேண்டும் என்று பேசிக்கொண்டு, சிறுபான்மையினர், பெரும்பான்மையினரை வீழ்த்தவும், அமுக்கவும் உடந்தையாக எவரும் இருக்கக் கூடாது.
ஓரிரு குடும்பங்களை முன்னிறுத்த இன பேதத்தை, மொழி பேதத்தை கிளப்பக் கூடாது.

இந்திய தேசம் இந்த மண்ணை அடிப்படையாகக் கொண்ட தேசம்; இந்தியாவினுடைய பாரம்பரியமும், பண்பாடும் தான் அதன் அடையாளங்கள். இந்திய பண்பாடு என்று சொல்கிறோம், அதை இந்து என்றும் சொல்லலாம், அதை மதமாகவும் பார்க்கலாம்.
ஆயிரமாண்டு அந்நிய படையெடுப்பு கணிசமான பாரதத்தாயின் புத்திரர்களை வேற்று மதத்திற்கு கபளீகரம் செய்துவிட்டது

நம்முடைய வழிபாடுகள் எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால், பண்பாட்டால், பாரம்பரியத்தால் நாம் பாரதத்தாயின் புத்திரர்கள் என்ற உணர்வு மழுங்கடிக்கப்பட்டது. மதம் என்ற விஷம் தலைக்கேற்றப்பட்டது. அதன் விளைவுகள் ஆங்கிலேயர்களிடத்திலிருந்து விடுதலை பெறுகிற பொழுது பூதாகரமாக வெடித்தது. ஒட்டுமொத்தமான முழுமதியாக விடுதலை பெற்றிருக்க வேண்டிய பாரத தேசம் மதத்துடைய அடிப்படையில் உடைக்கப்பட்டது.

மொழி வாதம், இனவாதம், மதவாதம் பூசி இந்த மண்ணை துண்டாட எவரும் அனுமதிக்கக் கூடாது. மொழி, இனம், மதவாதம் பேசக்கூடியவர்கள் உள்ளடக்கத்தில் தேசப் பிரிவினைவாதிகளே;
தேச விரோதிகளே! மொழி, இன, மத, சாதிய பேதங்களை மறந்து இந்தியராக பரிணமிப்போம்.

இந்தியா வளம் பெறட்டும்!

இந்தியா பலம் பெறட்டும்!!

இவ்வாறு கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.

©TNNEWS24

Loading...

செய்திகளை உடனே பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து telegram சேனலில் இணைத்து கொள்ளவும்

t.me/tnnews24official
About Tnnews24 2677 Articles
Arun Ramesh, Freelance Journalist, covers Defence & Geo-politics.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*