இனியும் பொறுக்க முடியாது வாருங்கள் ஒரு கை பார்த்து விடலாம் களத்திற்கு வந்த கிருஷ்ணசாமி !

தமிழக அரசின் இரட்டை நிலைப்பாட்டினால் பாதிக்கப்பட போவது அப்பாவி எழை இந்துக்கள் தான் என்பதை, இந்து இயக்கங்கள் பல காலமாக கூறிவந்தனர் ஆனால் அதனை மதம் கண்ணோட்டத்துடன் விமர்சிப்பதாக கூறி மடை மாற்றி வந்தன திராவிடம் இயக்கங்கள், மேலும் திராவிட இயக்கமான அதிமுகவில் இருந்து தீவிரமான இந்து மதம் கருத்துக்களையும் அவர்கள் பாதிப்புகளையும் எடுத்து கூறினார் ராஜேந்திர பாலாஜி ஆனால் அவரை வாய் திறக்கவிடாமல் பூட்டு போட்டார் எடப்பாடி.

Loading...

இந்நிலையில் மக்கள் ஊரடங்க்கு நீளுமானால் விரைவில் உணவு பொருளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு பஞ்சம் வரலாம் எனும் நிலை இருக்கும் போது தமிழக அரசு அதை கருத்தில் கொள்ளாமல் 5400 மெட்ரிக் டன் அரிசியை இலவசமாக ஒரு மதத்தவருக்கு வழங்கி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி நேரடியாக தனது கருத்துக்களை அரசியல் களத்தில் முன்வைத்து எச்சரிக்கை விடுத்துள்ளார் அவர் கூறியது பின்வருமாறு :-
“EQUITY AND EQUALITY” என்பது சமூகத்தில் ஏழையையும் பணக்காரரையும் ஒரே பார்வையில் பார்ப்பது அல்ல ! ஏழையை பணக்காரன் அளவில் உயர்த்தி பார்ப்பது தான். இன்னும் கொரோனா பாதிப்பால் ஊரடங்கு எவ்வளவு நாள் நீடிக்கும் என்று சொல்ல முடியாது. மக்கள் அச்சத்தின் காரணமாக விவசாய பணிகளுக்கு கூட செல்ல முடியாத நிலையில் இருக்கிறார்கள். எனவே, உடனடியாக பணியை துவங்கி தேவைக்கு ஏற்ற உணவை உற்பத்தி செய்ய முடியும் என்றும் சொல்ல முடியாது. எனவே, நம்மிடத்தில் இருக்கக் கூடிய உணவு தானியங்களை கையிருப்பு வைத்திருக்க வேண்டியது மிக மிக அவசியம். ஏனெனில், உணவுப் பொருட்களுக்கு தட்டுப்பாடு வருமேயானால் மக்கள் வீதிக்கு வந்து போராடும் சூழல் உருவாகிவிடும்
அரசு என்று வருகின்ற போது அது சமயம், சாதி சார்ந்ததாக இருக்கக் கூடாது.

Loading...

இந்தியா இந்துக்கள் பெரும்பாலும் வாழக்கூடிய நாடு. தேசிய அளவில் தீபாவளி, ஆயுதபூஜை, சரஸ்வதி பூஜை, விநாயகர் சதுர்த்தி, கிருஷ்ண ஜெயந்தி, மஹா சிவராத்திரி பொங்கல் போன்ற பல பெரிய பண்டிகைகளும், அந்தந்த மாநில அளவிலும், வட்டார அளவிலும் தைப்பொங்கல், ஆடி அமாவாசைகள், ஐயப்பன் வழிபாடு, சித்திரை திருவிழா, தைப்பூசம், மாசி மகம் மற்றும் குலதெய்வ வழிபாடு, தேரோட்டங்கள் என எத்தனையோ பண்டிகைகளும் உண்டு. மேற்குறிப்பிட்ட நாட்களில் இந்து மக்கள் பல நாட்கள் விரதங்கள் மேற்கொண்டு இஷ்ட தெய்வங்களை வணங்கி வருகிறார்கள்.

கிறிஸ்தவர்களுக்கு கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகைகளும், 40 நாட்கள் விரதம் மேற்கொண்டு அனுசரித்து வரும் புனித வெள்ளியும் பிரசித்தி பெற்றவைகளாகும். அதேபோல சீக்கிய மதத்தினர், சைவ மதத்தினர், புத்த மதத்தினர் என ஒவ்வொரு மதத்தினருக்கும் அவர்களுக்கு விசேஷமான நாட்களும், பண்டிகைகளும் உண்டு. அதேபோல இஸ்லாமியர்களுக்கு ரம்ஜான் மற்றும் பக்ரீத் ஆகிய விழாக்கள் முக்கியமானவைகள்.

கொரோனா தொற்று காரணமாக நாடு முழுவதும் இப்பொழுது முடக்கப்பட்டிருக்கிறது. மக்கள் அச்சத்தின் உச்சத்தில் இருக்கிறார்கள். வெளிநாட்டுக்கு சென்று வந்த இந்தியர்கள், வெளிநாட்டிலிருந்து இந்திய வந்த வெளிநாட்டவர்கள், அவர்களோடு நெருங்கி தொடர்பு கொண்டவர்கள் என பெரிய அளவிற்கு கொரோனா பரவியுள்ளது. தமிழக முதல்வர் அவர்கள் அண்மையில் பத்திரிகையாளர் சந்திப்பின் போது இது பணக்காரர்களால் கொண்டுவரப்பட்ட நோய் என்று பகிரங்கமாகவே சொன்னார்.

ஆனால், இதில் எவ்விதத்திலும் சமந்தப்படாத ஏழை, எளிய மக்கள் படக்கூடிய இன்னல்கள், விவசாய தொழிலாளர்கள் வடிக்கும் கண்ணீர், இலட்சோப லட்சம் மக்களின் அவலங்கள் குறித்து தகவல்கள் வந்த வண்ணமே உள்ளன. ஒவ்வொரு பிடி அரிசியையும் சேமித்து வைத்து அதை பசியோடும், பட்டினியோடும் இருக்கக்கூடிய ஏழைகளுக்கு மட்டுமே கொண்டுபோய் சேர்க்க வேண்டிய இந்த நேரத்தில் வேண்டாம் வேண்டாம் என்று தீர்மானம் போடக்கூடிய இடத்தில் ரம்ஜான் நோம்பு கஞ்சிக்கு என்று 5,480 மெட்ரிக் டன் அரிசியை ஏன் வீணடிக்க வேண்டும்? அப்படியே கொடுக்க வேண்டும் என்றாலும் கூட அந்த ஜமாத்தில் உள்ள ஏழைகளுக்கு மட்டும் கொடுப்பது தானே சரியானதாக இருக்க முடியும், ஆனால் அதைவிடுத்து இதுபோன்ற முக்கியமான காலகட்டத்தில் 5,480 மெட்ரிக் டன் அரிசியை வீணடிப்பது என்பது மிகப் பெரிய தவறான முன்னுதாரணம் ஆகும்.

ஓட்டுகளை மட்டுமே குறிக்கோளாக கொண்டு தமிழக அரசு தமிழகமெங்கும் அனைத்து ஜமாத்துகளுக்கும் 5,480 மெட்ரிக் டன் அரிசி ரம்ஜான் நோம்பு கஞ்சிக்காக வழங்குவதை எந்த விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது. அந்த அரிசியை உற்பத்தி செய்த ஏழை, எளிய விவசாயிகள் பசியோடும் பட்டினியோடும் இருக்கும்போது, அவர்களுக்கு இந்த 5,480 மெட்ரிக் டன் அரிசியை பகிர்ந்து அளித்திருக்கலாமே! இதையெல்லாம் கணக்கிலே கொள்ளாமல் இந்த அரசு செயல்படுவது முறையாகாது.

வருங்காலத்தில் இந்து மதத்தினர், கிறித்துவ மதத்தினர், புத்த மதத்தினர், ஜைன மதத்தினர், சீக்கிய மதத்தினரும் இதேபோல் தங்களுடைய விழாக்களுக்கும் அரிசி கேட்டு வீதிக்கு வந்து போராடவோ அல்லது நீதிமன்றம் செல்லக் கூடிய நிலைமையோ ஏற்படும். அது மட்டுமல்ல உழைத்துவிட்டு ஓடாய் தேயக்கூடிய உழைப்பாளி மக்கள் இதை உணரும் பட்சத்தில் பாரதிதாசன் சொன்னது போல ஒடப்பராய் இருப்பவர்கள் உதையப்பராகும் காலமும் வரலாம். எச்சரிக்கை செய்ய விரும்புகிறேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்,

மறைமுகமாக கூறாமல் நேரடியாக பிரச்சனைகளை குறிப்பிட்டு களத்திற்கு வந்த கிருஷ்ணசாமி அவர்களின் செயல்பாட்டிற்கு தற்போது பல தலைவர்களும் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர்.

©TNNEWS24

Loading...
About Tnnews24 2637 Articles
Arun Ramesh, Freelance Journalist, covers Defence & Geo-politics.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*