தமிழக அரசே தாலியை அறுக்காதீர்கள் – மேடையில் புலம்பிய தயாரிப்பாளர்!

தமிழக அரசே தாலியை அறுக்காதீர்கள் – மேடையில் புலம்பிய தயாரிப்பாளர்!

தமிழக அரசே தாலியை அறுக்காதீர்கள் – மேடையில் புலம்பிய தயாரிப்பாளர்!

தமிழ் சினிமாவில் தயாரிப்பாளராகவும், நடிகராகவும் வலம் வரும் கே ராஜன் தமிழக அரசை டாஸ்மாக் விஷயத்தில் விமர்சனம் செய்துள்ளார்.

தமிழ் சினிமாவில் தயாரிப்பாளர், பைனான்சியர் மற்றும் நடிகர் என பன்முகத் திறமைக் கொண்டவர் கே ராஜன். தனது அதிரடி மேடைப் பேச்சுகளால் கைத்தட்டுகளை வாங்கும் இவர் சர்ச்சைகளிலும் சிக்க தவறுவதில்லை. விஜய், அஜித் மற்றும் ரஜினி போன்ற நடிகர்களின் படங்கள் பொய் வசூல் கணக்குக் காட்டுவதை நேர்காணலில் கிழுத்து தொங்கவிடும் சமூக வலைதளங்களில் பிரபலமாக மாறி வருகிறார்.

Loading...

இந்நிலையில் அவர் நேற்று நடந்த ’பூதமங்கலம் போஸ்ட்’ என்ற புதிய படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர் சம்மந்தப்பட்ட படத்தை விடுத்து தமிழக அரசை விமர்சிக்கும் விதமாக ஒரு கருத்தைப் பேசினார். அவரின் பேச்சில் ‘ தமிழக அரசிடம் கெஞ்சிக் கேட்கிறேன். டாஸ்மாக் கடைகளை மூடிவிடுங்கள். வருமானத்துக்கு வேறு ஏதாவது வழியைப் பாருங்கள். தாலிக்குத் தங்கத்தை நீங்களே கொடுத்து அதை நீங்களே அறுக்காதீர்கள். இன்று பெரும்பாலான பெண்கள் குடிப்பழக்கத்துக்கு ஆளாகிவிட்டனர். காமராஜர் என்ன டாஸ்மாக்கை நம்பியா ஆட்சி நடத்தினார்?’ என சரமாரியாக கேள்விகளை எழுப்பினார். அவரது இந்த பேச்சு சமூக வலைதளங்களில் கவனம் ஈர்த்துள்ளது.

Loading...
Loading...

24 Cinema

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *