பிரபல தயாரிப்பாளரின் மகளுக்கு கொரோனா உறுதி – தனிமைப் படுத்தப்பட்ட உறவினர்கள்!

பிரபல தயாரிப்பாளரின் மகளுக்கு கொரோனா உறுதி – தனிமைப் படுத்தப்பட்ட உறவினர்கள்!

Loading...

பிரபல பாலிவுட் தயாரிப்பாளரான கரிம் மொரானியின் மகள் ஷாஜா மொரானிக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸால் இதுவரை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 12,00,000 ஐ தாண்டியுள்ளது. தாக்குதலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 70,000 ஐ தாண்டியுள்ளது. இந்த பாதிப்பு முதலில் சீனாவில் அதிகமாகக் காணப்பட்டாலும் இப்போது அந்நாடு அதைக் கட்டுக்குள் கொண்டுவந்துள்ளது. அமெரிக்கா மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளில் பாதிப்பு அதிகமாக உள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4000 ஐ தாண்டியுள்ளது.

Loading...

இந்நிலையில் இந்த வைரஸால் உலகெங்கும் உள்ள பிரபலங்கள் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் ஏற்கனவே பாலிவுட் பாடகி கனிகா கபூர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று குணமானார். இந்நிலையில் மீண்டும் ஒரு பாலிவுட் குடும்பம் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது.

பிரபல பாலிவுட் தயாரிப்பாளரான கரீம் மொரானி ஷாருக் கான் நடித்த ரா ஒன் மற்றும் சென்னை எக்ஸ்பிரஸ் ஆகிய படங்களைத் தயாரித்தவர். இவரின் மகள் ஷாஜா மொரானி ஆஸ்திரேலியா சென்று திரும்பியிருந்தார். முதலில் அவருக்கு எந்த அறிகுறிகளும் இல்லாத நிலையில் தற்போது அவருக்குக் கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது. இதையடுத்து ஷாஜா மொரானி மும்பை நானாவதி மருத்துவமனையில் ஷாஜியா அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதனால் கரீம் மொரானியின் குடும்பத்தார் மற்றுஇம் ஷாஜாவோடு தொடர்பில் இருந்தவர்கள் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*