Connect with us

சினிமா

என் வீட்டை எழுதிக் கொடுத்தேன்… இப்போது நஷ்டம்! – விஜய் தேவாரகொண்டாவை விரட்டும் தயாரிப்பாளர்!

என் வீட்டை எழுதிக் கொடுத்தேன்… இப்போது நஷ்டம்! – விஜய் தேவாரகொண்டாவை விரட்டும் தயாரிப்பாளர்!

இந்த மாதம் வெளியான வேல்டு பேமஸ் லவ்வர் எனும் திரைப்படத்தின் தயாரிப்பாளர் கதையின் நாயகன் விஜய் தேவாரகொண்டா மீது புகார் எழுப்பியுள்ளார்.

அர்ஜுன் ரெட்டி வெற்றிக்குப் பின் விஜய் தேவாரகொண்டா தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் ரசிகக்கப்பட கூடிய கதாநாயகனாக உருவானார். அதையடுத்து அவர் நடிக்கும் படங்கள் இரு மொழிகளிலும் வெளியாக தொடங்கின. இந்நிலையில் காதலர் தினத்தை முன்னிட்டு அவர் நடித்த வேல்டு பேமஸ் லவ்வர் எனும் திரைப்படம் வெளியானது.

Loading...

கிட்டதட்ட 30 கோடிக்கு வியாபாரம் செய்யப்பட்ட இந்த படம் 10 கோடி மட்டுமே வசூலித்துள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் இப்படத்தின் தயாரிப்பாளர் ’விஜய் தேவாரகொண்டா படத்தின் கதையில் தலையிட்டு மாற்றங்களை செய்தார். அதனால் தான் படம் பிளாப் ஆனது. மேலும் அவருக்கு பேசிய சம்பளத்தில் மீதி 2 கோடிக்காக என் வீட்டை எழுதிக் கொடுத்தேன். இப்போது விநியோகஸ்தர்கள் நஷ்டத்தைத் திருப்பித் தரும் படி கேட்கின்றனர். அவர் என் வீட்டை திருப்பி தந்தால்தான் என் கடனை அடைக்க முடியும்’ என குற்றம் சாட்டியுள்ளார்.

Loading...

வளர்ந்து வரும் ஹீரோவான விஜய் தேவாரகொண்டா இந்த சர்ச்சையில் சிக்கியிருப்பது அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Loading...

Trending