தனியார் தொலைக்காட்சியில் இணைகிறாரா பாண்டே உண்மை என்ன பிரத்தியேக தகவல் !

சென்னை :- முன்னணி தமிழ் ஊடகம் ஒன்றில் தலைமை செய்தியாசிரியராக பணியாற்றிய பாண்டே தனது பொறுப்பில் இருந்து தன்னை விடுவித்து வெளியேறிவிட்டார், தான் பொறுப்பில் இருந்து வெளியேறியது என்னுடைய தனிப்பட்ட விருப்பம், இளைஞர்களுக்கு வாய்ப்பு அளிக்கும் விதமாக தான் இந்த முடிவை எடுத்ததாக பாண்டே தெரிவித்தார்.

Loading...

அதனை தொடர்ந்து பாண்டே வெளியேறியதற்கு பல காரணங்கள் கூறப்பட்டது, அரசியல் கட்சியின் அழுத்தம் உள்ளிட்ட பல தகவல்கள் கூறப்பட்டுவந்த நிலையில் பாண்டே தனியாக சாணக்யா என்ற இணைய ஊடகத்தை நடத்தி வந்தார், பல்வேறு ஊடங்கங்கள் பாண்டே விற்கு அழைப்பு விடுத்த நிலையில் பாண்டே அதனை தவிர்த்துவிட்டார் என்றும் கூறப்பட்டது.

இந்நிலையில்தான் பாண்டே மீண்டும் தமிழகத்தில் உள்ள மற்றொரு தனியார் தொலைக்காட்சியான NEWS7 தமிழ் தொலைக்காட்சியின் தலைமை பொறுப்பினை ஏற்று நடத்த இருப்பதாகவும், தற்போது பின்னணியில் இதற்கான பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாகவும் செய்திகள் வெளியாகின, ஆனால் இவை அனைத்தும் கற்பனையே என்றும் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பாண்டே news 7 குழுவிற்கு நேர்காணல் கொடுத்திருந்த வீடியோவினை அதன் ப்ரோமோ வீடியோவினையும் இந்த ஆண்டு வெளியானது என சிலர் நினைத்து கொண்டு மீண்டும் வதந்திகளை பரப்பி வருவதாக பிரத்தியேக தகவல் கிடைத்துள்ளது.

Loading...

மேலும் பாண்டே தனியாக தனது chanakyaa இணைய ஊடகத்தை தென் இந்தியாவில் கொண்டுவர முயற்சிகள் மேற்கொண்டு வருவதும் அதில் 70 % பணிகள் முடிவடைந்து விட்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன மேலும் 2021 தமிழக சட்டசபை தேர்தலுக்கு முன்னர் பாண்டே தனது தனியார் தொலைக்காட்சியை சாட்டலைட் சேனலாக கொண்டுவருவார் என்றும் தகவல்கள் கிடைத்துள்ளன. இரண்டு தரப்புமோ இந்த தகவலை இதுவரை அதிகார பூர்வமாக அறிவிக்காத சூழலில் சில இணையதளங்கள் மூலம் வதந்திகள் பரவுவது குறிப்பிடத்தக்கது.

விரைவில் பாண்டே தனது சாணக்யா தொலைக்காட்சி மூலம் அதிரடியாக களம் இறங்குவார் என்பதே தற்போதைய நிலவரம் ! ©TNNEWS24

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://telegram.me/tnnews24official

Loading...

செய்திகளை உடனே பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து telegram சேனலில் இணைத்து கொள்ளவும்

t.me/tnnews24official
About Tnnews24 3942 Articles
Arun Ramesh, Freelance Journalist, covers Defence & Geo-politics.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*