கொரோனா சோதனை மற்றும் சிகிச்சை கட்டணம் – சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி!

கொரோனா சோதனை மற்றும் சிகிச்சை கட்டணம் – சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி!

Loading...

தனியார் மருத்துவமனையில் கொரோனாவுக்காக சிகிச்சை மற்றும் சோதனை செய்ய அரசு கட்டணம் நிர்னயிக்கவேண்டும் என்ற மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்று 2.05 லட்சமாக உள்ளது. இதில் பலியானவர்களின் எண்ணிக்கை மட்டும் 6000 ஐ நெருங்கியுள்ளது. இந்நிலையில் கொரோனா நோயாளிகள் அனைவருக்கும் அரசு மருத்துவமனைகளில் இலவசமாக சிகிச்சை அளித்து வருகிறது. ஆனாலும் சில பணக்கார மற்றும் உயர்நடுத்தர மக்கள் தனியார் மருத்துவமனைகளை நாடுகின்றனர்.

Loading...

தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சோதனைக்காக 4500 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்பட வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆனால் அதைவிட 3000 முதல் 5000ரூ வரை அதிகமாக வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. மேலும் சில தனியார் மருத்துவமனைகளும் கொரோனா நோயாளிகளை தங்க வைத்து சிகிச்சை அளித்து வருகின்றனர். ஆனால் அதற்காக அவை வசூலிக்கும் கட்டணமோ நம்ப முடியாததாக உள்ளது. ஒரு நாளைக்கு ஒரு லட்ச ரூபாய் வரை வசூலிப்பதாக சொல்லப்படுகிறது.

இது சம்மந்தமாக சென்னை உயர்நீதிமன்றத்தில் சிகிச்சைக்கு கட்டணம் நிர்ணயிக்கக் கோரிய மனு சற்றுமுன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இது சம்மந்தமான வழக்கு உச்சநீதிமன்றத்தில் இருப்பதால் அதில் தலையிட முடியாது என கூறியுள்ளது.

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*