ஈ எம் ஐ கட்ட வாடிக்கையாளர்களுக்கு வந்த குறுந்தகவல் – ரிசர்வ் வங்கி உத்தரவை மீறுகின்றனவா வங்கிகள்!

Loading...

தனியார் வங்கி ஒன்று தனது வாடிக்கையாளர்களுக்கு மாதத் தவணைக் கட்ட சொல்லி குறுஞ்செய்தி அனுப்பியதால் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக 21 நாட்கள் ஊரடங்கு அறிவிக்கப் பட்டதை அடுத்து ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்ததாஸ்  கடந்த 27 ஆம் தேதி பல சலுகைகளை மக்களுக்கு அறிவித்திருந்தார். அதில் வங்கியில் வாங்கிய அனைத்துவிதக் கடன்களுக்கும் அடுத்த மூன்று மாதத்துக்கு ஈஎம்ஐ கட்டத் தேவையில்லை என அறிவித்தார். இதனால் மக்களுக்கு ஒரு மிகப்பெரிய சுமை நீங்கியது.

Loading...

இந்நிலையில் இப்போது ரிசர்வ் வங்கியின் கீழ் செயல்பட்டு வங்கி தனது வாடிக்கையாளருக்கு மாதத்தின் கடைசி நாளான நேற்று தனது வாடிக்கையாளர்கள் சிலருக்கு நினைவூட்டல் குறுஞ்செய்தி அனுப்பியுள்ளது. இது வாடிக்கையாளருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் கடனைக் கட்டவேண்டுமா வேண்டாமா என மக்கள் குழம்பியுள்ளனர். மேலும் ரிசர்வ் வங்கி உத்தரவை மீறி வங்கிகள் நடந்துகொள்வது முறையில்லை எனவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இந்நிலையில் வங்கிகள் தரப்பில் தங்களுக்கு ரிசர்வ் வங்கியிடம் இருந்து எந்தவிதமான எழுத்துப் பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை என்று சொல்லப்படுவதாக தெரிகிறது.

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*