Connect with us

#24 Exclusive

பிரதமர் வீட்டுவசதி திட்டம் தமிழகத்தில் 26 ஆயிரம் பேருக்கு அடித்தது அதிர்ஷ்டம் !

பிரதமர் வீட்டுவசதி திட்டம் தமிழகத்தில் 26 ஆயிரம் பேருக்கு அடித்தது அதிர்ஷ்டம் !

மத்திய ஒதுக்கீடு மற்றும் கண்காணிப்புக் குழுவின் 47-ஆவது அமர்வு மாநிலங்களில் மொத்தம் ரூ.4988 கோடி முதலீட்டில் 1.23 லட்சம் வீடுகள் கட்டுவதற்கான 630 படிவங்களுக்கு ஒப்புதல் வழங்கியுள்ளது. இதில் மத்திய அரசின் நிதியுதவி ரூ.1805 கோடி.  இந்த ஒப்புதலையடுத்து, பிரதமர் நகர்ப்புற வீட்டுவசதி திட்டத்தின்கீழ், 90 லட்சத்திற்கும் கூடுதலாக வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

தேவைப்படும் வீடுகளின் எண்ணிக்கை 1.12 கோடியாகும்.இந்தக் கூட்டத்தில் தமிழ்நாடு, கர்நாடகா, குஜராத் உட்பட பத்து மாநிலங்கள் பங்கேற்றன. இதில் தமிழ்நாட்டில் 26,709 வீடுகளை, ரூ.939  கோடியில் கட்டுவதற்கான 158 கருத்துருக்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.  இதில் மத்திய அரசின் பங்கு ரூ.400.64 கோடியாகும். 

Loading...

இந்தத் திட்டத்திற்கு ரூ.1.43 லட்சம் கோடி வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்திருந்தது.  இதில் ரூ.57,758 கோடி ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது.

Loading...

மத்திய அரசின் திட்டங்களில் அதிகம் பயன்பெறும் மாநிலமாக தமிழகம் கடந்த 4 ஆண்டுகளில் முன்னேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Loading...

Trending