Connect with us

#24 Exclusive

என்ன சொன்னீங்க கருப்பு தினமா நாடாளுமன்றத்தில் வைகோவை வெளுத்து எடுத்த மோடி !

பிரதமர் மோடி இன்று மக்களவை மாநிலங்களவை என இரண்டு அவைகளிலும் விவாதத்தில் பங்கேற்று உரையாற்றி வருகிறார், கடந்த 6 மாதங்களில் மோடியை எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்ததற்கு நேரடியாக அதிரடியாக பதில் அளித்து வருகிறார் பிரதமர், இன்று மதியம் மக்களவையில் பேசிய பிரதமர் ராகுல் காந்தியை கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். அதனை தொடர்ந்து வைகோவை மாநிலங்களவையில் விமர்சனம் செய்துள்ளார்.

மக்களவையில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:
எதிர்கட்சி எம்பி(ராகுல்) 6 மாதத்தில் எனக்குப் பிரம்படி விழும் எனக் கூறியிருந்தார். நான் அதனா ஒரு முடிவு செய்துள்ளேன். இதற்காக அதிக நேரம் சூரிய நமஸ்காரம் செய்ய இருக்கிறேன். அப்போதுதான் பொய்களை என்னால் வலிமையோடு எதிர்கொள்ள முடியும்.

கடந்த நாட்களில் ஆதாரங்கள் ஏதுமில்லாமல், நான் மிகவும் தவறாகச் சித்தரிக்கப்படுகிறேன். அவர்களின் எண்ணங்களைப் பற்றி எனக்கு எந்த கவலையும் இல்லை.
இவ்வாறு மோடி பேசிக் கொண்டிருந்தார். இந்த பேச்சு முடிவடைகிறது எனத் தெரிந்தவுடன் பதில் அளிப்பதற்கு ராகுல் வேகமாக எழுந்தார்.

Loading...

அப்போது மீண்டு பேச்சை எடுத்த மோடி, “நான் இந்த பேச்சை 30லிருந்து 40 நிமிடங்களாகப் பேசிக் கொண்டிருந்தேன், ஆனால் இந்த பேச்சு இப்போதுதான் அங்கு(ராகுலை) சேர்ந்துள்ளது. சில டியூப்லைட்கள் இப்படிதான் வேலை செய்யும் என கிண்டல் செய்ய ராகுல் தனது இடத்தில் சென்று அமர்ந்துகொண்டார்.

Loading...

இந்நிலையில் மாநிலங்களவை வந்த பிரதமர் வைகோவை பார்த்தவுடன் கடந்த 5 ஆகஸ்ட் 2019 காஷ்மீருக்கு ஒரு கருப்பு நாள் என்று வைகோ கூறினார். வைகோ தெரிந்து கொள்ளுங்கள் இது காஷ்மீருக்கு கருப்பு நாள் அல்ல, பயங்கரவாதத்தையும் பிரிவினைவாதத்தையும் ஊக்குவித்தவர்களுக்கு இது ஒரு கருப்பு நாள் எழுதி வைத்து கொள்ளுங்கள் நடக்கும் என்றார்.

மேலும் இந்தியாவில் உள்ள முஸ்லிம்கள் உரிமை பறிக்கப்படுகிறது என புலம்புவர்கள் பாகிஸ்தானில் உள்ள இந்துக்களின் நிலையை என்றாவது நினைத்து பார்த்தது உண்டா உங்களுக்கு எல்லாம் அதற்கு நேரம் இருக்கிறதா என மிகவும் ஆக்ரோஷமாக கேள்வி எழுப்பினார், அத்துடன் இந்தியாவில் NPR நிச்சயம் தேவை எனவும் ஓவ்வொரு மாவட்டத்திலும் கணக்கெடுப்பு அமல்படுத்தப்படும் என்று அதிரடியாக தெரிவித்தார்.

பிரதமர் மோடி மிகவும் அழுத்தம் திருத்தமாக இன்று மாநிலங்களவையில் பேசியதை பார்த்தால் நிச்சயம் CAA எதிராக மக்களை திசை திரும்புபவர்கள் மீது வலுவான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது. பிரதமர் பதிலடி கொடுத்த நேரத்தில் வைகோ முகத்தில் கொடுத்த ரியாக்ஷன் தற்போது வைரலாகி வருகிறது. வைகோவிற்கே இப்படி பதிலடி கிடைத்தது என்றால் திட்டமிட்டு CAA குறித்து போராட்டங்களை முன்னெடுக்கும் திமுக நிலைமை?

©TNNEWS24

Loading...

Trending