பிரதமருக்கு இணையாக மம்தா பலே ஏற்பாடு, ஆட்சிக்கு வந்ததும் ஸ்டாலினும் தருவதாக உத்தரவாதம்.

பீஹாரை சேர்ந்த பிரஷாந்த் கிஷோர், முக்கிய அரசியல் கட்சிகளுக்கு, தேர்தல் வியூகங்களை வகுத்து தரும் அமைப்பை நடத்தி வருகிறார். கடந்த ஆண்டு நேரடி அரசியலுக்குள்ளும் நுழைந்தார். பீஹாரின், ஆளும் ஐக்கிய ஜனதாதள கட்சியில் சேர்ந்த அவர், அக்கட்சியின் தேசிய துணைத் தலைவராக நியமிக்கப்பட்டார். ஆனால், குடியுரிமை திருத்த சட்டம் குறித்து கட்சியின் நிலைப்பாட்டிற்கு எதிராக பிரசாந்த் பேசியதால், கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்.

Loading...

இந்நிலையில் பிரசாந்த் கிஷோருக்கு பிரதமருக்கு இணையான பாதுகாப்பு வழங்க மேற்கு வங்க மாநில அரசு முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன, பிரசாந்த் கேட்டதற்கு இணங்க அவருக்கு z பிரிவு பாதுகாப்பை மம்தா வழங்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன, மேலும் திமுக ஆட்சிக்கு வந்ததும் பிரசாந்த் கிஷோருக்கு Z பிரிவு பாதுகாப்பு வழங்கப்படும் என ஸ்டாலினும் உறுதி அளித்துள்ளாராம் திமுக, திரிணமூல் ஆகிய கட்சிக்கு பிரசாந்த் கிஷோர் தேர்தல் வியூகம் பொறுப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பிரசாந்த் கிஷோருக்கு Z பாதுகாப்பு வழங்க படுவது குறித்து பானுகோம்ஸ் க விமர்சனம் செய்துள்ளார் அவர் கூறியதாவது, JDU கட்சியிலிருந்து பிரஷாந்த் கிஷோர் விலகியபின்…தன்னுடைய கட்சிக்கு அரசியல் ஆலோசகராக நியமித்துக் கொண்டார் மம்தா.இப்போது பிரஷாந்த் கிஷோருக்கு Z பிரிவு பாதுகாப்பை மாநில காவல்துறையை கொண்டு அளித்திருக்கிறார் ..மேற்குவங்காள முதல்வர் மம்தா.

Loading...

ஒவ்வொரு அரசியல் கட்சியிடமும் 400 கோடி, 500 கோடி என்று பகல் கொள்ளை அடித்துக் கொண்டிருக்கும் பிரஷாந்த் கிஷோருக்கு …தன்னுடைய சொந்த செலவில் பாதுகாப்பு படையை உருவாக்கிக் கொள்ள முடியாதா என்ன ?!!மக்கள் வரிப்பணத்தில் ..Z பிரிவு கமாண்டோக்களின் ஆயுதம் தாங்கிய பாதுகாப்பு!

CAA, பங்களாதேஷ் காரர்களின் ஊடுருவல் அதிகமுள்ள மாநிலங்களில் ஒன்றான மேற்கு வங்காளம், அதன் முதல்வர் மம்தா, தமிழக எதிர் கட்சி, இதன் CAA எதிர்ப்பு , இவர்கள் இருவருக்கும் வேலை பார்க்கும் பிரஷாந்த் கிஷோர், தமிழகத்தின் திடீர் CAA எதிர்ப்பு போராட்டங்கள் என்று வெளிப்படையாக இணையும் பல புள்ளிகளின் மைய்ய புள்ளி பிரஷாந்த் கிஷோர். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

©TNNEWS24

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*