Connect with us

#24 Exclusive

மகனுடன் சென்று பிரதமரை சந்தித்த உத்தவ் ஸ்டாலின் வாழ்த்து வீண்போகவில்லை பாஜகவினர் கிண்டல் ! முடிந்தது பஞ்சாயத்து

மஹாராஷ்டிரா மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே தனது மகன் ஆதித்யாவுடன் சென்று பிரதமர் நரேந்திர மோடியை பார்த்து தனியாக ஆலோசனை நடத்தியிருப்பது தேசிய அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மஹாராஷ்டிரா மாநில சட்டமன்ற தேர்தலில் கடந்த ஆண்டு கூட்டணி அமைத்து போட்டியிட்ட பாஜக மற்றும் சிவசேனா கட்சி அதிக தொகுதியில் வெற்றி பெற்றது, இருப்பினும் முதல்வர் பதவியை பகிர்ந்து கொள்வதில் ஏற்பட்ட போட்டியின் காரணமாக கூட்டணி, முறிந்தது, அதனை தொடர்ந்து பல்வேறு அரசியல் சம்பவங்கள் அரங்கேறின.

யாரும் எதிர்பாராத விதமாக சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் ஒன்றிணைந்து கூட்டணி ஆட்சி அமைத்தன, முதல்வராக உத்தவ் தாக்கரே பொறுப்பேற்றார், ஆனால் முக்கிய மந்திரி பதவிகள் அனைத்தையும் தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகள் எடுத்துக்கொண்டன.

Loading...

இதனால் அதிகாரமில்லாத முதல்வராக வலம்வந்தார் உத்தவ் மேலும் தனது கட்சியின் மிகப்பெரிய பலமான இந்துத்துவ கொள்கையும் கொஞ்சம் கொஞ்சமாக சரிய ஆரம்பித்தது, இதனால் அதிர்ச்சி அடைந்த சிவசேனா எப்போது வேண்டுமானாலும் ராஜினாமா செய்யலாம் என கூறப்படுகிறது, இந்நிலையில் தான் முதல்வர் உத்தவ் பிரதமர் மோடியை சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தியுள்ளார்.

Loading...

வெளியில் மாநில திட்டங்கள் குறித்து பேசியதாக கூறப்பட்டாலும், உள்ளுக்குள் புலம்பி தீத்திருக்கிறார் உத்தவ், எப்படி குமாரசாமியை கர்நாடகாவில் டம்மியாக வைத்து காங்கிரஸ் ஆட்சி நடத்தியதோ அதே போன்று நிலைமை இருப்பதாக புலம்பி இருக்கிறார். ஆனால் மோடி எதற்குமே பிடிமானம் கொடுக்கவில்லையாம்.

இந்நிலையில் இந்த செய்தி வெளியானது முதல் பாஜகவினர் கிண்டல் அடித்து வருகின்றனர், பாஜகவை எதிர்க்க வேண்டும் என்பதற்காக ஸ்டாலின் உத்தவ் தாக்கரே பதவியேற்பு விழாவிற்கு சென்றபோதே தெரியும் விரைவில் ஆட்சி கவிழும் என்று, அவர் குமாரசாமிக்கு வாழ்த்து சொன்னார் என்ன நடந்தது அதுபோல் உத்தவ் தாக்கரேவிற்கு ஸ்டாலின் சொன்ன வாழ்த்துக்கள் வீண்போகவில்லை எனவும் கிண்டல் அடித்து வருகின்றனர்.

மத்திய பிரதேசம், ராஜஸ்தான், மஹாராஷ்டிரா ஆகிய மூன்று மாநிலங்களில் எப்போது வேண்டுமானாலும் ஆட்சி மாற்றம் ஏற்படலாம் என்று கூறப்படுகிறது.

©TNNEWS24

Loading...
Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending