Connect with us

#24 Exclusive

பிரசாந்த் கிஷோர் வைத்த முதல் ஆப்பு? பிரசன்னாவிற்கு ! இதற்கு கம்யூனிஸ்ட் கட்சிக்கு போயிருக்கலாம் !!

தமிழகத்தில் 2021 ம் ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெறவிருக்கிறது, இதனையடுத்து தொடர்ந்து 9 ஆண்டுகளாக ஆட்சியில் இல்லாத திமுக இந்த முறை எப்படியாவது ஆட்சியை பிடித்து விடவேண்டும் என்று களத்தில் தீவிரமாக இறங்கியுள்ளது, அதன் வெற்றிக்கு உதவ இந்தமுறை தேர்வு செய்த கார்ப்பரேட் கம்பெனி IPAC இது பிரசாந்த் கிஷோர் தலைமையில் இயங்குகிறது.

இந்த கம்பெனி தாங்கள் யாருக்கு வேலை செய்கிறோமோ அவர்களது அனைத்து தேர்தல் குறித்த பொறுப்புகள், மாவட்ட செயலாளர்கள் பொறுப்பு, பொதுக்கூட்டங்கள் நடத்துவது, கையெழுத்து இயக்கம் என தொடங்கி அனைத்து பொறுப்புகளையும் தங்கள் வசம் கொண்டுவந்துவிடும் சுருக்கமாக சொல்லப்போனால் வேட்பாளர் தேர்வில் உள்ள சாதக பாதகங்கள் என தேர்தல் முடியும் வரை கட்சியின் தலைவரை போன்றே செயல்படும்.

கட்சியின் தலைவர் உடுத்தும் உடையில் இருந்து, அவர் அணியும் காலணிகள் வரை அனைத்தையும் ஊருக்கு ஏற்றார் போல் இந்த நிறுவனமே மேற்கொள்ளும், சமூக வலைத்தளங்களில் சம்பந்தபட்ட கட்சியின் புகழ் பாடவும், எதிர் கட்சிகளை விமர்சனம் செய்யவும் தங்களுக்கு சாதகமான ஊடகங்களை கைப்பற்றி மக்கள் மத்தியில் கருத்துக்களை எடுத்து செல்லும் இதன் மூலம் எதிர்கட்சிகள் குறைகளை எடுத்து கூறுவதுடன் தங்களது ஒப்பந்ததாரரை வெற்றி அடைய நேரடியாக மறைமுகமாக அனைத்து வேலையையும் செய்யும்.

Loading...

அந்த வகையில் முதல் அதிரடியாக வீரபாண்டி ஆறுமுகம் மகன் கட்சியின் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டதன் பின்னணியில் இந்நிறுவனம் ஸ்டாலினுக்கு அறிவுரை வழங்கியதாக கூறப்படுகிறது, அதனை தொடர்ந்து ஊடகத்தில் பேசும் திமுகவினருக்கு தனி பயிற்சி அளிக்க இந்த நிறுவனம் தனி ஆலோசனையை நடத்திவருகிறதாம், எந்த கேள்வியை நெறியாளர் கேட்டால் எப்படி பதில் சொல்லவேண்டும், எங்கு குரலை உயத்தவேண்டும் என்பதில் தொடங்கி எங்கு அமைதியாக இருக்கவேண்டும் என்ற பல்வேறு ஆலோசனைகளை வழங்கி வருகிறதாம்.

Loading...

அதில் திமுகவின் செய்தி தொடர்பாளரில் ஒருவரான பிரசன்னாவை முக்கிய விவாதங்களில் பங்கு கொள்ள வேண்டாம் என அந்நிறுவனம் கட்சிக்கு பரிந்துரை செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது, காலை நேரத்தில் நடைபெறும் விவாதங்கள், ஊர் கூட்டங்களில் தெருமுனை பிரச்சாரம் சிறுபான்மையினர் மத்தியில் மட்டுமே பிரசன்னாவை பேச அந்நிறுவனம் அறிவுரை வழங்கியுள்ளதாம்.

பல விவாதங்களில் பிரசன்னாவின் பேச்சு அப்பட்டமாக இந்து எதிர்ப்பாளர் போன்று இருப்பதும், அவதூறான வார்த்தைகளை பயன்படுத்துவதால் பார்க்கும் பார்வையாளர் மத்தியில் தவறான அவிப்பிராயத்தை கட்சியின் மேல் ஏற்படுத்தும் என்பதால் இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது, அதே நேரத்தில் இது குறித்த உறுதியான தகவல் இல்லை சமீப காலமாக பிரசன்னா முன்பை போன்று நிகழ்ச்சிகளில் பங்கேற்பது வெகுவாக குறைந்து வருவது குறிப்பிடத்தக்கது.

பிரசன்னா நேற்று காலை நடந்த விவாதத்தில் கூட நான் இந்து பார்ப்பனர்கள் இந்துக்கள் இல்லை என ஆவேசமாக பேசினாரே அவருக்கா இந்த வாய்ப்பூட்டு? இப்படிக்கு அடக்கு முறைக்கு மத்தியில் இருப்பதற்கு அருணன் போன்று கம்யூனிஸ்ட் கட்சியில் காலத்தை கடத்திவிடலாம் எனவும் விமர்சனங்கள் வருகின்றன.

Loading...

Trending