Connect with us

#24 Exclusive

பிரசாந்த் கிஷோர் கட்சியில் இருந்து அதிரடி நீக்கம் ! ஸ்டாலினிடம் ரகசியத்தை சொன்னது காரணமா?

தமிழகத்தில் வருகிற சட்டமன்ற தேர்தலில் திமுக தலைவர் ஸ்டாலினை முதல்வர் ஆக்கவேண்டும் என்பதற்காக ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் அறிவுரையின்படி ‘IPAC’ அமைப்பின் தலைவர் பிரசாந்த் கிஷோரை திமுகவின் தேர்தல் வியூகம் பொறுப்பாளராக அமர்த்தப்பட்டார் பிரசாந்த் கிஷோர் அவர் தற்போது ஐக்கிய ஜனதாதளம் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளார்.

கடந்த 2018-ம் ஆண்டு ஐக்கிய ஜனதா தளத்தில் இணைந்த பிரசாந்த் கிஷோர், அண்மை காலமாக, நிதிஷ் குமாரின் முடிவுகள் குறித்து விமர்சித்து வந்தார். இதுகுறித்து, நேற்றைய செய்தியாளர் சந்திப்பில் மனம் திறந்த நிதிஷ்குமார், அமித் ஷா சொன்னதால்தான் , பிரசாந்த் கிஷோரை கட்சியில் சேர்த்ததாக கூறினார்.

இதற்கு ட்விட்டரில் பதிலளித்த பிரசாந்த் கிஷோர் என்னைப்பற்றிய பொய்களை பரப்ப வேறு எதுவும் நிதிஷ்குமாருக்கு கிடைக்கவில்லையா என கேட்டார், இதற்கு முன்னர் பாஜகவின் முடிவுகளை ஆதரிப்பதற்காக நிதிஷ்குமாரை விமர்சனம் செய்துவந்தார் பிரசாந்த் கிஷோர். இந்நிலையில் பிரசாந்த் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.

Loading...

இதன் பின்னணியில் திமுகவின் தேர்தல் வியூகம் பொறுப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்ட IPAC அமைப்பு கடந்த காலத்தில் பீகாரில் பாஜகவை எதிர்ப்பதற்கு என்ன யுத்தியை கையாண்டோம் என்பது குறித்துவிரிவாக விளக்கியதும், பாஜகவை தேசிய அளவில் எதிர்க்கவும் ஸ்டாலினை தேசிய தலைவர் அந்தஸ்திற்கு உயர்த்தவும் பல்வேறு வியூகங்களை வகுத்ததாகவும் அதனால் பாஜக நிதிஸ் இடையே இடைவெளி உண்டாவதால் பிரசாந்தை கட்சியில் இருந்து நீக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.

Loading...

திமுக தலைவர் ஸ்டாலினின் ராசி பல மாநிலங்களில் ஆட்சி அமைக்க உதவிய பிரசாந்த் கிஷோரின் அரசியல் எதிர்காலத்தை முடித்துவிட்டதாக நெட்டிசன்கள் கிண்டல் அடித்து வருகின்றனர்.

©TNNEWS24

Loading...

Trending