வெற்றிக்காக என்னவெல்லாம் செய்யும் பிரசாந்த் கிஷோர் நிறுவனம் அதிர்ச்சி தகவலை வெளியிட்ட பெண் எழுத்தாளர் !

திமுக அதிகாரபூர்வமாக வருகிற 2021- ம் ஆண்டு தேர்தலில் திமுக வெற்றிக்கு IPAC நிறுவனத்துடன் இணைந்து பணியாற்ற போவதாக அறிவித்துள்ளது, இதனையடுத்து பல்வேறு விமர்சனங்களும், திமுகவை ட்ரோல் செய்து மீம்களும் வெளிவந்தவண்ணம் உள்ளன, இந்த நிலையில் பெண் எழுத்தாளர் வெண்பா பிரசாந்த் கிஷோரின் IPAC நிறுவனம் வெற்றிக்காக என்னவெல்லாம் செய்யும் என்பதனை குறித்து தனது கருத்தினை தெரிவித்துள்ளார், அது பின்வருமாறு :-

Loading...
    பார்ப்பனர் பிரஷாந்த் கிஷோர் என்று திமுகவை வைத்து கலாய்த்துக்கொண்டிருக்கிறோம். உண்மையில் IPAC வலைதளத்தை மேய்ந்ததில் அதுவொரு மிகப்பெரிய networkஐ அமைத்து professionalஆன வெற்றியை உருவாக்குவதற்கான அனைத்து அம்சங்களையும் கொண்டிருக்கிறது. திமுக வெற்றி பெறுவதற்கு 80% வெற்றி வாய்ப்பினை நேரடியாகவும் மறைமுகமாகவும் உருவாக்கித் தருகிறது. முதல்விஷயம் இங்கு social networkஐயும் societyஐயும் கவனிக்கின்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பினை ஏற்படுத்தி தருவதற்கான requirementsஐ அளித்திருக்கிறது. 

தற்காலிகப் பணி என்றாலும் புதுவிதமான கவர்ச்சியையும் ஆர்வத்தையும் ஏற்படுத்தும். ஆர்வம் குறைகின்ற போது தேர்தல் முடிந்திருக்கும். ஏனெனில் ஜெகன் மோகன் ரெட்டிக்கு IPAC நிறுவனம் அமைத்த வியூகப்பணிகளில் நேரடியாகவும் மறைமுகமாகவும் 5 லட்சம் பேர் வரை பணி செய்தனர். ஒவ்வொரு பூத்திலும் கிட்டத்தட்ட 11 தன்னார்வலர்கள் பணியாற்றினர். தன்னார்வலர்கள் என்றும் influencerகள் என்றும் content writerகள் என்றும் அழைக்கப்பட்டாலும் தனித்தனியாக முறையான ஊதியம் வழங்கப்படுவது இதன் சிறப்பு.

     திருமங்கலம் formula மாதிரி பணமும் பொருளும் அள்ளி வீசவேண்டியதில்லை. Brainwash பண்ண ஏதுவானவர்களுக்கும் நிகழ்ச்சிகளை நடத்துபவர்களுக்கும் சரியான அளவில் செலவளித்தால் போதுமானது. 2000 ஒரு ஓட்டுக்கு என்று அளித்து அதில் 1000 பாக்கெட்டுக்கு போவது போன்ற ஊழல் இதில் கிடையாது. இந்த பணிகளில் பெருந்திரளாக இளைஞர்கள் பயன்படுத்தப்படுகின்றார்கள். மோடியுடைய Manthan நிகழ்வு, ஜெகன் அண்ணா பிலுபு போன்றவை ஒருங்கமைக்கப்பட்ட நிகழ்ச்சிகளுக்கு சான்று. கிராமங்களில் நித்திஷ் குமாருக்கு நடத்திய சைக்கிள் பிரச்சாரங்கள் மாதிரி பாமரர்கள் கவனிக்கக் கூடிய நிகழ்வுகளை நடத்த வாய்ப்புண்டு. 

    ஏற்கெனவே கொஞ்சநாள் முன்பு AIஐக் கொண்டு பதிவுகளும் வீடியோக்களும் மீம்களும் report செய்யப்பட்டு முடக்கும் மாதிரி முயற்சிகள் நடந்தன. அதை இனி officialஆக செய்வதற்கான பணிகள் நடக்கும். எல்லா கட்சிகளிலும் இருக்கும் influencers hashtag trending சூட்சுமத்தை அறிவார்கள். அது மோடி முதன்முறையாக பிரதமர் ஆகும்போது பிரஷாந்த் கிஷோர் உருவாக்கிய strategy. ஆனால் மோடி அதை சாமர்த்தியமாக உபயோகப்படுத்திவிட்டு விட்டுவிட்டார். பிறகு அத்தனை influencersஉம் அதே பாணியை உபயோகப்படுத்தத் துவங்கி இன்றுவரை trending மாயையிலிருந்து நாம் விடுபடவில்லை.

   US Electionsஇன் PAC நிறுவனங்களின் campaign பாணிகளை நம் ஊருக்கு ஏற்றாற்போல வளைத்து திருத்தி அளிப்பதே IPACஇன் அடிப்படை நோக்கமாகும். பஞ்சாப்பில் zee newsஉடன் இணைந்து பணியாற்றியது IPAC. தமிழ்நாட்டில் ஏற்கெனவே "நாங்க இருக்கோம்" என்று தமிழக செய்தி ஊடகங்கள் திமுகவுக்கு வேலை பார்க்கின்ற நிலையில் ஊடகங்களை விடவும் முக்கியமான strategy ஒன்றை IPAC செய்யப்போகின்றது. இதுவரை IPACஇன் தோல்வி என்பது உத்திரப்பிரதேசத்தில் மட்டும்தான். 

     திமுக IPACஐ professional ஆக உபயோகப்படுத்தும் நிலையில் திமுகவின் எதிர்த்தரப்பாக நின்றிருக்கும் பாஜக மாநிலத்தலைவரே இல்லாமல் அமைந்திருக்கிறது. ஆளுங்கட்சி அதிமுக இப்படியான வியூகங்களில் கவனம் செலுத்துவது அவசியம். ஏற்கெனவே இருக்கின்ற News J சேனலில் மாற்று சித்தாந்தம் கொண்டவர்களும் மாற்றுக்கட்சியை சார்ந்தவர்களும் அதிகரித்து வருகின்றனர். அதிமுக மற்ற கட்சிகள் மாதிரி கிடையாது. தொண்டர்களும் தலைவர்களுடன் சேர்ந்து உழைத்து வளர்த்த கட்சி. Campaign professionalகளுக்கு எதிர்த்தரப்பாக நிற்க இன்னும் பலமடங்கு பலம் தேவை என புரிந்து செயலாற்ற வேண்டும். தமிழக பாஜகவினருக்கு PK பற்றிய புரிதல் என்னவென்று தெரியவில்லை.

அதிமுகவினரும் IPACஐ விளையாட்டுத்தனமாக நினைத்துவிடக்கூடாது. இப்போதே Anti DMK குறித்த அத்தனை Dataவையும் IPAC நிறுவனம் அழகாகத் திரட்டி blueprintஐ உருவாக்கியிருக்கும். ஆனால் அதிமுக தொண்டனுக்கு PK எளிய போஜ்புரி பிராமணராக மட்டுமே அறியப்படுவார் என்பதில் இருக்கிறது விளையாட்டின் தொடக்கம். எனவே திமுகவின் எதிர்த்தரப்பு professionalஆக தங்களை பலப்படுத்திக்கொள்கிற அவசியத்தில் இருக்கிறது என்பதை திமுக சாராத ஒவ்வொருவரும் உணர்ந்தாக வேண்டும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Loading...

வெற்றிக்காக எந்த எல்லைக்கும் அந்நிறுவனம் செல்லும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது, இதே நேரத்தில் 2014-ம் ஆண்டு பாஜக வெற்றிக்கு பிரசாந்த் கிஷோர் அமைத்த வியூகம் தான் காரணம் என அவர் கூற பாஜக தரப்போ தொண்டர்கள் வேலைதான் வெற்றிக்கு காரணம் என கூறி பிரசாந்தை கழட்டிவிட்டது, அதன் பிறகு 2016- ம் ஆண்டு உத்திரபிரதேசம் சட்டசபையில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக வேலை பார்த்தார் அக்கட்சி வரலாறு காணாத படு தோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது.

©TNNEWS24

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://telegram.me/tnnews24official

Loading...

செய்திகளை உடனே பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து telegram சேனலில் இணைத்து கொள்ளவும்

t.me/tnnews24official
About Tnnews24 3917 Articles
Arun Ramesh, Freelance Journalist, covers Defence & Geo-politics.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*