அந்தாதூன் படத்துக்காக ஆளே மாறிய பிரசாந்த் – இணையத்தில் வைரலாகும் புகைப்படம் !

அந்தாதூன் படத்துக்காக ஆளே மாறிய பிரசாந்த் – இணையத்தில் வைரலாகும் புகைப்படம் !

Loading...

நடிகர் பிரசாந்த் நீண்ட நாட்களுக்குப் பிறகு அந்தாதூன் படத்தினை தனக்கு திருப்புமுனையாக அமையும் என எதிர்பார்த்து காத்திருக்கிறார்.

இந்தியில் மிகப்பெரிய வெற்றி பெற்ற அந்தாதூன் படத்தின் தமிழ் ரீமேக் உரிமையைப் பெற்றுள்ள பிரசாந்தின் தந்தை தியாகராஜன், அதில் தன் மகனை நடிக்க வைத்து அவரை மீண்டும் புகழ் வெளிச்சத்துக்குக் கொண்டு வர முயற்சி செய்து வருகிறார்.

Loading...

இதற்காக தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான மோகன் ராஜாவை அந்த படத்தை இயக்க வைத்துள்ளார். இந்நிலையில் அந்த படத்தின் கதாநாயகன் தோற்றத்துக்காக தனது உடல் எடையை குறைத்து முடியை அதிகமாக வளர்த்து வருகிறார். இதுவரை அவரது தோற்றத்தை வெளிக்காட்டாத நிலையில் இப்போது பிரசாந்தின் புகைப்படம் வெளியாகியுள்ளது.

சமீபகாலமாக உடல் எடை அதிகரித்து காணப்பட்ட பிரசாந்த் இப்போது மீண்டும் இளமையாக 90 களில் இருந்த சாக்லேட் பாய் போன்ற தோற்றத்தோடு இந்த படத்தில் தோன்ற இருக்கிறார். இந்த படத்தில் பணிபுரியும் மற்ற தொழில்நுட்பக் கலைஞர்கள் பற்றிய விவரம் விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது.

Loading...

செய்திகளை உடனே பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து telegram சேனலில் இணைத்து கொள்ளவும்

t.me/tnnews24official

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*