மிஷ்கின் இல்லாத துப்பறிவாளன் 2 எப்படி இருக்கும்? ரசிகரின் கேள்விக்கு பதில் அளித்த பிரசன்னா!

மிஷ்கின் இல்லாத துப்பறிவாளன் 2 எப்படி இருக்கும்? ரசிகரின் கேள்விக்கு பதில் அளித்த பிரசன்னா!

Loading...

துப்பறிவாளன் 2 படத்தை மிஷ்கின் இயக்காதது குறித்து நடிகர் பிரசன்னா கருத்து தெரிவித்துள்ளார்.

கடந்த 2017 ஆம் ஆண்டு மிஷ்கின் இயக்கத்தில் விஷால், பிரசன்னா நடித்த துப்பறிவாளன் திரைப்படம் நல்ல வெற்றியைப் பெற்றது. இந்த நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் கடந்த ஆண்டு தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக படப்பிடிப்பு நடைபெற்று வந்தது. இளையராஜா இசையில் உருவாகி வந்த இந்த படத்தின் படப்பிடிப்பு லண்டனில் நடைபெற்று கொண்டிருந்த நிலையில் இந்த படத்தில் இருந்து மிஷ்கின் திடீரென விலகி விட்டதாக கூறப்படுகிறது.

Loading...

இந்த படத்தை முடித்துக் கொடுக்க ரூபாய் 40 கோடி மிஷ்கின் கேட்டதாகவும் அதற்கு விஷால் கொடுத்த மறுத்துவிட்டதாகவும் அதுமட்டுமின்றி மிஷ்கினை இந்த படத்தில் இருந்து தூக்கி விட்டு தானே இந்த படத்தின் மீதி உள்ள பகுதிகளை இயக்க திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. இது சம்மந்தமாக விஷால் பற்றி மிஷ்கின் பேசிய வீடியோ சமூகவலைதளங்களில் வைரலானது.

இந்நிலையில் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருக்கும் பிரசன்னாவிடம் ரசிகர் ஒருவர் ‘மிஷ்கின் இல்லாமல் துப்பறிவாளன் 2 படம் எப்படி இருக்கும்?’ எனக் கேள்வி எழுப்ப அதற்குப் பதிலளித்துள்ள பிரசன்னா ‘அவர் இந்த படத்தில் இல்லாதது துரதிர்ஷ்டமானது. ஆனால் விஷால் திறமையானவர். அதை அவர் இந்த படத்தின் மூலம் நிரூபிப்பார்.’ எனக் கூறியுள்ளார்.

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*