ரசிகரின் காலை பிடித்த ரஜினி வைரலாகும் புகைப்படம் !! வாழ்த்தும் ரசிகர்கள் !!

சமூகவலைத்தளம் : மாற்று திறனாளி இளைஞர் பிரணவ் நடிகர் ரஜினி காந்தை அவரது இல்லத்தில் சந்தித்த போது எடுத்துக்கொண்ட புகைப்படம் அவரது ரசிகர்களை தாண்டி பெரும்பான்மையான இந்தியர்களின் வரவேற்பை பெற்று வருகிறது.

Loading...

கேரளாவை சேர்ந்த மாற்று திறனாளி இளைஞர் பிரணவ் இவர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கேரள முதல்வர் பிரனாயி விஜயனை சந்தித்து புகைப்படம் எடுத்து கொண்டார் அப்போது இரு கால்களை கொண்டு எடுத்த செல்பி வைரலானது, இந்நிலையில் பிரணவ் நடிகர் ரஜினிகாந்தை சந்திக்கவேண்டும் என்று விருப்பம் தெரிவித்திருந்தார்.

அதற்கு நடிகர் ரஜினிகாந்தும் உடனடியாக ok சொல்ல இன்று சென்னை போயஸ் காலனியில் அமைந்துள்ள ரஜினி இல்லத்தில் சந்திப்பு நடந்தது அப்போது நடிகர் ரஜினியுடன் தனது கால்களை கொண்டு கை கொடுத்தார் மாற்று திறனாளி இளைஞர் பிரணவ் இந்த புகைப்படம்தான் தற்போது இந்திய அளவில் ட்ரெண்ட் ஆகிவருகிறது.

Loading...

எளிமையை எப்போதும் நான் விரும்புவதாகவும் நடிகர் ரஜினியை அதனால் பிடிக்கும் என்றும் பிரணவ் கூறியுள்ளார், வாழ்வை மகிழ்ச்சியுடன் எதிர்கொண்டுவரும் பிரணவ் மாற்று திறனாளி மாணவர்களுக்கு மேலும் ஊக்கத்தை கொடுத்துவரும் புதிய வரம் என்று அனைவரும் வாழ்த்தி வருகின்றனர்.

ரசிகரை மதிக்கும் தலைவர் என்று ரஜினி ரசிகர்களும் வாழ்த்தி வருகின்றனர்.

©TNNEWS24

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*