Connect with us

சினிமா

ஊழியர்களுக்கு மூன்று மாத சம்பளம் – முன்னணி நடிகரின் சூப்பர் செயல் !

ஊழியர்களுக்கு மூன்று மாத சம்பளம் – முன்னணி நடிகரின் சூப்பர் செயல் !

நடிகர் பிரகாஷ்ராஜ் தன்னிடம் வேலைப்பார்க்கும் பணியாளர்களுக்கு மூன்று மாத சம்பளத்தை முன்பணமாகக் கொடுத்துள்ளார்.

கொரோனா வைரஸ் தாக்குதல் மூலம் இதுவரை உலகளவில் 2,00,000 பேருக்கு மேல் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் வைரஸ் தாக்குதலால் இறந்தவர்களின் எண்ணிக்கை 15,000 ஐ தாண்டியுள்ளது. இதனால் வைரஸ் பரவியுள்ள 192 நாடுகளிலும் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Loading...

இந்தியாவில் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 470 ஆக உள்ளது. இதையடுத்து இந்தியா முழுவதும் உள்ள பெருவாரியான மாநிலங்கள் ஊரடங்கை அறிவித்துள்ளனர். இன்று மாலை முதல் மார்ச் 31 ஆம் தேதி வரை தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட இருக்கிறது. இதனால் மக்கள் தங்கள் சொந்த ஊருக்குப் படையெடுக்க ஆரம்பித்துள்ளனர். இந்த ஊரடங்கின் மூலம் ஏழை மற்றும் தினக்கூலி மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

Loading...

இதனால் எல்லாத்துறைகளையும் போல திரைத்துறையும் கடுமையாக பாதித்துள்ளது. இதனால் சினிமாவில் வேலைபார்க்கும் தினக்கூலி தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் நடிகர் பிரகாஷ்ராஜ் தன்னிடம் வேலைபார்க்கும் பணியாளர்களின் கஷ்டம் அறிந்து அவர்களுக்கு மே மாதம் வரையிலான சம்பளத்தை அளித்துள்ளார்.

இது சம்மந்தமாக தனது டிவிட்டர் பக்கத்தில் ‘ எனது வீடு, சினிமா தயாரிப்பு நிறுவனம், அறக்கட்டளை ஆகியவற்றில் பணிபுரிபவர்கள் என அனைவருக்கும் மே மாதம் வரைக்குமான சம்பளத்தை இப்போதே வழங்கி விட்டேன். கொரோனா பீதி காரணமாக நின்று போயிருக்கும் எனது மூன்று படங்களிலும், சம்பந்தப்பட்ட தினக்கூலி பணியாளர்களுக்குக் குறைந்தது அரை சம்பளத்தைத் தர வேண்டிய வழிமுறைகளை மேற்கொண்டுள்ளேன். ஆயினும் இன்னும் முடியவில்லை. என்னால் முடிந்த வரை இன்னும் பண்ணுவேன் . நம்முடையே வாழ்க்கைக்கு நாம் திரும்பத் தர வேண்டிய நேரமிது. ஒருவருடன் ஒருவர் ஆதரவாக நிற்க வேண்டிய வேளை இது’ எனக் கூறியுள்ளார்.

அவரது இந்த செயலுக்கு சமூகவலைதளங்களில் பாராட்டுகளைப் பெற்றுள்ளது.

Loading...
Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending