முத்தலாக் தடை கொண்டுவரவே பாஜகவிற்கு வாக்களித்தேன் கண்ணீர் விட்ட இஸ்லாமிய பெற்றோர் – பிரகாஷ் ஜவடேகர் உறுதி

கடந்த முறை பாஜக ஆட்சியில் இருந்தபோது முத்தலாக் தடை மசோதாவை கொண்டுவர முயற்சிசெய்தது பாஜக, ஆனால் மக்களவையில் நிறைவேறிய அந்த மசோதா,

Loading...

மாநிலங்களவையில் பாஜகவிற்கு போதுமான பலம் இல்லாததால் மாநிலங்கள் அவையில் நிறைவேறவில்லை, இந்நிலையில் பிரபல ஆங்கில தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த,

மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த இஸ்லாமியர் ஒருவர் தனது மதத்தை சார்ந்த மத குருக்கள் பாஜகவிற்கு வாக்களிக்கக்கூடாது என்று கண்டிப்பாக கூறினர்.

Loading...

ஆனால் நான் பாஜகவிற்கு தான் வாக்களித்தேன் காரணம் எனது 2 மகள்களும் முத்தலாக் கொடுமையால் பாதிக்கப்பட்டு வாழாவெட்டியாக வீட்டில் உள்ளனர்.

இந்த முத்தலாக் முறையை தடை செய்து , முத்தலாக் செய்வது தண்டனைக்குரிய குற்றம் என்ற சட்டத்தை கொண்டு வரவேண்டும்.

அந்த சட்டம் வந்தால் தான் பல இஸ்லாமிய பெண்களின் வாழ்க்கை காப்பாற்றப்படும் என்று கூறியுள்ளார் , இதை பார்த்த மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்

நிச்சயம் முத்தலாக் தடை சட்டம் கொண்டுவரப்படும் இந்த 5 ஆண்டுகள் முடியும்போது முத்தலாக் முறை தடைசெய்யப்பற்றிருக்கும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

©TNNEWS24

செய்திகளை உடனுக்குடன் உங்களது whatsapp எண்ணில் இலவசமாக பெற 9962862140 என்ற WHATSAPP எண்ணிற்கு ACT FREE என்று வாட்ஸாப்பில் மெசேஜ் அனுப்பவும்.

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*