பிரக்யா சிங்கிற்கு பார்சலில் கொடிய விஷத்தை அனுப்பிய இஸ்லாமிய மருத்துவர், தமிழகத்திற்கு காவல்துறை விரைவு !!

பாஜக எம் பி யும், பெண் சாமியார் பிரக்யா சிங்கிற்கும் கடந்த வாரம் மூன்று வெவ்வேறு கடிதங்கள் வந்தன அதில் ஒன்று உருது மொழியில் இருந்தது மற்றொன்று இந்தியில் இருந்தது இந்த நிலையில் மற்றொரு பார்சலில் கொடிய விஷம் தடவி அனுப்பப்பட்டுள்ளது, இதனை அறிந்த பிரக்யா சிங்கின் பாதுகாவலர்கள் காவல்துறைக்கு புகார் அளித்தனர், காவல்துறை பார்சல் அனுப்பட்ட கம்பெனியில் இருந்து விசாரணையை தொடங்கினர்.

Loading...

விசாரணையில் ஒரு வயதான பெண் பார்சலை அனுப்பியது கண்டறியப்பட்டது, அதனையடுத்து நந்தேடு தானேகான் கிராமத்தில் ஆயுர்வேத கிளினிக் ஒன்றை நடத்தி வந்த டாக்டர் சயீத் அப்துல் ரஹ்மான் கான் (35) என்பவர் மீது சந்தேகம் ஏற்பட்டது. அவரிடம் விசாரணை மேற்கொண்டதில் இவர்தான் விஷ பார்சல் குடும்பத்தினர் உதவியுடன் அனுப்பினார் என்பது தெரியவந்துள்ளதாக போலீசார் கூறினர். விசாரணையில் இந்த டாக்டர் மேலும் பல அரசியல்வாதிகளுக்கும் இதே போன்ற கடிதங்களை அனுப்ப இருந்ததும் தெரிய வந்துள்ளது.

அவர் எழுதி வைத்திருந்த கடிதங்களில் இருந்து அவர் தம்பி ஒருவரும் அவரது தாயாரும் தீவிரவாத இயக்கத்தில் தொடர்புடையவர்கள் என தெரிய வந்துள்ளது. 26 | 11 தாக்குதல் மற்றும் புல்வாமா தாக்குதலுக்குப் பின் அதே பாணியில் பிரக்யாசிங் தாக்குரை கொல்ல இவர் தனது குடும்பத்துடன் முயன்றதும் தெரிய வந்துள்ளது. அன்சாருல் முசல்மீன் என்பவரும் பிரக்யாசிங் தாக்குரை கொல்ல ஒருவராக நியமிக்கப் பட்டிருந்தார் எனவும் அவரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட கடிதங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.

Loading...

ஆனால் இதில் மற்றொரு அதிர்ச்சி சம்பவம் என்ன வென்றால் கைப்பற்றப்பட்ட கொடிய விஷம் தமிழகத்தில் நீலகிரி மாவட்டத்தில் இருந்து பெறப்பட்டதாகவும், அவ்வளவு எளிதில் கிடைக்காத விஷம் நிச்சயம் மிக பெரிய பயங்கரவாத கும்பல் இதன் பின்னணியில் இருக்கலாம் என்றும் இது குறித்து விசாரணை நடத்த மத்தியபிரதேச காவல்துறையினர் தமிழகம் விரைந்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

தொடர்ந்து இந்து அமைப்பினர் மற்றும் பாஜகவினரை கொலை செய்யும் நோக்கிலும், இந்தியாவில் பல்வேறு தீவிரவாத குழுக்கள் வளர்ந்து இருப்பதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது, அதிலும் கடந்த 2014 ம் ஆண்டிற்கு பிறகு தீவிரவாத அமைப்புடன் தொடர்புடைய பிடிபட்ட 177 பேரில் 35 தீவிரவாதிகள் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் என்பதும் தமிழகத்தில் தான் அதிகமான அளவில் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடைய நபர்கள் பிடிபட்டது குறிப்பிடத்தக்கது.

©TNNEWS24

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://telegram.me/tnnews24official

Loading...

செய்திகளை உடனே பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து telegram சேனலில் இணைத்து கொள்ளவும்

t.me/tnnews24official
About Tnnews24 3917 Articles
Arun Ramesh, Freelance Journalist, covers Defence & Geo-politics.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*