Connect with us

சினிமா

சாஹோ தோல்வி… அடுத்த படத்தில் ஹிட் இயக்குனர் – பிரபாஸ் முடிவு !

சாஹோ தோல்வி… அடுத்த படத்தில் ஹிட் இயக்குனர் – பிரபாஸ் முடிவு !

சாஹோ படத்துக்குப் பின்னர் தான் நடிக்கும் அடுத்தடுத்த படங்களில் இளம் இயக்குனர்களுக்கு வாய்ப்புக் கொடுத்து வருகிறார் பிரபாஸ்.

பாகுபலி 1 மற்றும் 2 ஆகிய படங்களின் வெற்றி பிரபாஸை உலக அளவில் மிகப்பெரிய ஸ்டாராக்கியது. இதனால் அவர் நடித்த சாஹோ திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. ஆனால் மோசமான திரைக்கதையால் அந்த படம் விமர்சனங்களை சந்தித்தது. இதனால் தனது அடுத்த படத்தில் ரூட்டை மாற்றி காதல் படத்தில் நடித்து வருகிறார். இன்னும் பெயரிடப்படாத அந்த படம் பிரபாஸ் 20 என அழைக்கப்பட்டு வருகிறது.

Loading...

அதையடுத்து அவர் நடிக்கும் ’பிரபாஸ் 21’ என்ற திரைப்படத்தை தெலுங்கு சினிமாவின் பழமையான நிறுவனங்களில் ஒன்றான வைஜெயந்தி மாலா மூவிஸ் தயாரிக்க இருக்கிறது. அந்த நிறுவனத்தின் 50 ஆவது ஆண்டு தொடக்க விழாவான இன்று அந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Loading...

இந்த படத்தை ’மகாநடி; படத்தின் இயக்குனர் நாக் அஸ்வின் இயக்க இருக்கிறார். நாக் அஸ்வினின் மனைவி வைஜெயந்தி மாலா தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. விரைவில் மற்ற தொழில்நுட்ப கலைஞர்கள் விரைவில் அறிவிக்கப்படுவார்கள் எனத் தெரிகிறது.

Loading...
Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending