Connect with us

சினிமா

தன்னைதானே தனிமைப்படுத்திக் கொண்ட பிரபாஸ் – ஏன் தெரியுமா ?

தன்னைதானே தனிமைப்படுத்திக் கொண்ட பிரபாஸ் – ஏன் தெரியுமா ?

கொரோனா வைரஸ் பீதி அதிகமாகியுள்ள நிலையில் தெலுங்கு நடிகர் பிரபாஸ் தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.

சீனாவில் முதன் முதலாக கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் இப்போது மனிதர்கள் வாழும் 6 கண்டங்களிலும் வேகமாகப் பரவி வருகிறது. இதுவரை 13000 பேர் இந்த வைரஸ் தாக்குதலால் இறந்துள்ளனர். கிட்டதட்ட இரண்டு லட்சத்துக்கும் மேலானவர்கள் வைரஸ் தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் இந்த நோய் தாக்குதல் கண்டறியப்பட்டு மூன்றாவது வாரம் ஆகியுள்ளது.

Loading...

இந்நிலையில் இந்தியாவில் வைரஸ் பரவலைத் தடுக்கும் விதமாக மக்கள் தங்களைத் தாங்களே தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர். இதையடுத்து சினிமா நட்சத்திரங்களும், விளையாட்டு வீரர்களும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை வலியுறுத்தி வருகின்றனர்.

Loading...

இதையடுத்து தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான பிரபாஸ் வெளிநாட்டு படப்பிடிப்பில் கலந்துகொண்டு திரும்பியுள்ள பிரபாஸ் தனது டிவிட்டர் பக்கத்தில் ‘வெளிநாட்டு படப்பிடிப்பில் இருந்து நான் பாதுகாப்பாக திரும்பியுள்ளேன். கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வரும் சூழ்நிலையில், என்னை நானே தனிமைப்படுத்திக்கொள்ள முடிவு செய்துள்ளேன். நீங்களும் கொரோனாவில் இருந்து உங்களை காத்துக்கொள்ள பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றுங்கள்’ எனக் கூறியுள்ளார்.

Loading...

Trending