Connect with us

#24 Exclusive

சசிகலா கேரக்டரில் நடிக்க முடியாது: திடீரென விலகிய பிரபல நடிகை

பிரபல இயக்குனர் விஜய் இயக்கி வரும் ’தலைவி’ திரைப்படத்தில் ஜெயலலிதா கேரக்டரில் பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் நடித்து வருவது தெரிந்ததே. இந்நிலையில் இந்த படத்தில் சசிகலா கேரக்டரில் நடிக்க தேசிய விருது பெற்ற நடிகை பிரியாமணி ஒப்பந்தம் செய்யப்பட்டு இருந்தார். அவருக்கு மேக்கப் டெஸ்ட் எல்லாம் எடுத்து ஓகே செய்யப்பட்டு, படப்பிடிப்புக்கு தயாரான நிலையில் திடீரென அவர் அந்த படத்திலிருந்து விலகிவிட்டதாக கூறப்படுகிறது

கால்ஷீட் பிரச்சனை காரணமாக இந்த படத்தில் இருந்து பிரியாமணி விலகி விட்டதாக கூறப்பட்டாலும் உண்மையான காரணம் குறித்து படக்குழுவினர் தெரிவிக்க மறுத்து வருகின்றன. இந்த நிலையில் பிரியாமணிக்கு பதிலாக நடிகை பூர்ணா, சசிகலா கேரக்டரில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாகவும், அவருடைய காட்சிகளின் படப்பிடிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் தொடங்கும் என்றும் கூறப்படுகிறது

நடிகை பூர்ணா அருள்நிதியின் ’வம்சம்’ உள்பட பல படங்களில் நாயகியாக நடித்தவர் என்பதும் சமீபத்தில் வெளியான சூர்யாவின் ‘காப்பான்’ திரைப்படத்தில் சமுத்திரகனிக்கு ஜோடியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் ஜெயலலிதா கேரக்டரில் கங்கனா ரனாவத், எம்ஜிஆர் கேரக்டரில் அரவிந்த் சாமி, ஜானகி எம்ஜிஆர் கேரக்டரில் மது பாலா, சோபன்பாபு கேரக்டரில் ஜிஷூ சென்குப்தா ஆகியோர் நடித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

Loading...
Loading...
Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending