பொன்முடி விவகாரம் மத்திய அரசிற்கு கடிதம் எழுதிய அரசு அதிகாரிகள் ! மூடி மறைத்த ஸ்டாலின் பலே திட்டம் அம்பலம்

திமுக சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான பொன்முடி மீது குற்றம் சுமத்தி உள்துறை அமைச்சகத்துக்கு முன்னாள் IAS மற்றும் IPS அதிகாரிகள் கடிதம் எழுதி இருப்பதாக தகவல்கள் வெளியான நிலையில் திமுக மற்றும் அதிமுக இரண்டு தரப்புமே அதிர்ச்சியில் உள்ளனர்.

Loading...

கடந்த வாரம் திமுக சட்டமன்ற உறுப்பினர் பொன்முடி விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று தனது ஆதரவாளர் ஒருவருக்கு E பாஸ் வழங்காதது குறித்து கேள்வி எழுப்ப சென்றார், அப்போது அவர் நடந்துகொண்ட விதம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஆட்சியர் அலுவலகம் வந்த பொன்முடி முதலில் கூடுதல் ஆட்சியர் ஸ்ரேயாபிசிங் அவரின் உதவியாளரை கண்டதும் நீதான் நேர வர சொன்னியா, உன்னால் கொடுக்க முடியாத என ஒருமையில் பேசினார் அதன் பின்பு ஆட்சியர் அறைக்கு சென்று அங்கு இருந்த கூடுதல் ஆட்சியர் ஸ்ரேயா பி சிங்கிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டு அவரை ஒருமையில் பேசினார்.

Loading...

இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியை உண்டாக்கியது, அதே நேரத்தில் இதுவரை பொன்முடி மீது ஆளும் தரப்பு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை, எதிர்க்கட்சியை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் நேரடியாக ஆட்சியர் அலுவலகம் சென்று அரசு அதிகாரிகளை நிற்கவைத்து ஒருமையில் பேசியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அவ்வப்போது மாநில நிகழ்வுகளை எடுத்து சொல்லும் முன்னாள் உயர் அதிகாரிகள் சிலர் கடிதம் ஒன்றிணை அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது, அதில் தொடர்ந்து தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை உண்டாக்கும் நிலையை நோக்கி செல்கிறது.

அடிமட்டத்தில் இருக்கும் காவலர்கள் தொடங்கி ஆட்சியர் அலுவலகம் வரை யாருக்கும் பாதுகாப்பு இல்லாத நிலை உண்டாகியுள்ளது, எதிர்க்கட்சியை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் மிரட்டல் விடுத்த நிலையில் அவர் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை, ஜெயலலிதா அவர்கள் காலத்தில் இருந்த அரசு ஊழியர்கள் குறிப்பாக காவல் துறையினர் மற்றும் அரசுஅதிகாரிகளுக்கான சுதந்திரம், பாதுகாப்பு இப்போது இல்லை.

ஓபிஎஸ் முதல்வராக இருந்த போது கூட சட்டம் ஒழுங்கு மீறப்படவில்லை ஆனால் இப்போது தவறு இழைக்கும் எதிர் கட்சியினர் மீது கூட நடவடிக்கை எடுக்க இங்கு அரசு அதிகாரிகள் பயப்படும் நிலையே நிலவுகிறது, சட்டம் ஒழுங்கு குறித்தும், மாவட்ட ஆட்சியர்கள் பாதுகாப்பு குறித்தும் உடனடியாக தமிழக தலைமை செயலாளரிடம் விளக்கம் கேட்கவேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

இந்நிலையில் பொன்முடியின் வீடியோ வைரலாகி வருவது திமுகவினரை அதிர்ச்சி அடைய செய்துள்ளது, சமீபத்தில் விக்கிரவாண்டியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் திமுக அதிக வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது, இந்நிலையில் பொன்முடி அரசு ஊழியர்களை மிரட்டிய வீடியோ வைரலாவது கட்டப்பஞ்சாயத்து போன்ற திமுகவின் முந்தைய கால தவறுகளை மீண்டும் மக்களுக்கு வெளிச்சம் போட்டு காட்டி விடுமோ என திமுக தலைமை கவலை படுகிறது.

மேலும் பொன்முடி விவகாரத்தை மூடி மறைக்கும் விதமாகத்தான் பிரசாந்த் கிஷோர் கொடுத்த ஐடியா படி ஸ்டாலின் மதுக்கடைகள் திறப்பதற்கு எதிராக போராட்டம் செய்ய அழைப்பு விடுத்து பொன்முடி அரசு அதிகாரிகளை மிரட்டிய விவகாரத்தை மழுங்கடிக்க முயன்றதாக குற்றசாட்டுகள் எழுந்துள்ளன.

©TNNEWS24

Loading...
About Tnnews24 2647 Articles
Arun Ramesh, Freelance Journalist, covers Defence & Geo-politics.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*